பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

முத்து குளிப்பவரே கொஞ்சம் பக்கத்திலே வாங்க...

மறந்து போன பாடல். மறந்து போன இசையமைப்பாளர். மறந்து போன இனிமை நினைவுகள்.


திரைப் படம் சத்தியம் தவறாதே (1968)
இயக்கம்: பாண்டி செல்வராஜ்
இசை: C N பாண்டுரங்கன்
நடிப்பு: ரவிசந்திரன், விஜயநிர்மலா, ஷீலா??
குரல்கள்: T M S, P சுசீலா


http://www.mediafire.com/download.php?4mp98y4pedbhjfu

முத்து குளிப்பவரே கொஞ்சம் பக்கத்திலே வாங்க

முத்து குளிப்பவரே கொஞ்சம் பக்கத்திலே வாங்க

முக்கனிச் சாறெடுத்து எங்க கிண்ணத்திலே தாங்க

முக்கனிச் சாறெடுத்து எங்க கிண்ணத்திலே தாங்க

முத்து குளிப்பவரே கொஞ்சம் பக்கத்திலே வாங்க


மூழ்கி எழுந்துவிட்டேன்
இந்த முத்தையும் கண்டெடுத்தேன் ஹா

மூழ்கி எழுந்துவிட்டேன்
இந்த முத்தையும் கண்டெடுத்தேன்

மனதில் பூட்டி வைப்பேன்
என் உயிரை காவல் வைப்பேன்

மனதில் பூட்டி வைப்பேன்
என் உயிரை காவல் வைப்பேன்

மூழ்கி எழுந்துவிட்டேன்
இந்த முத்தையும் கண்டெடுத்தேன்

உறக்கம் வராமல் என்னைத் தடுப்பதென்ன

உறக்கம் வராமல் என்னைத் தடுப்பதென்ன

பொறுக்க விடாமல் உள்ளம் தவிப்பதென்ன

பொறுக்க விடாமல் உள்ளம் தவிப்பதென்ன

காற்று வந்து முத்தமிட்டால்
கார்மேகம் நீர் பொழியும்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

காற்று வந்து முத்தமிட்டால்
கார்மேகம் நீர் பொழியும்

காதல் வெள்ளம் பொங்கி வந்தால்
காவியத்தில் தேன் பாயும்

காதல் வெள்ளம் பொங்கி வந்தால்
காவியத்தில் தேன் பாயும்

மூழ்கி எழுந்துவிட்டேன்
இந்த முத்தையும் கண்டெடுத்தேன்

இளமை வானிலே எண்ணம் பறப்பதென்ன

இளமை வானிலே எண்ணம் பறப்பதென்ன

இனம் புரியாத சுகம் பிறப்பதென்ன

இனம் புரியாத சுகம் பிறப்பதென்ன

நெருங்கி வந்து நின்றுவிட்டால்
நினைவும் மயங்கி வரும்

நெருங்கி வந்து நின்றுவிட்டால்
 நினைவும் மயங்கி வரும்

மயக்கம் வந்து தெளியும் முன்னே
மறு நாளும் விடிந்து விடும்

மயக்கம் வந்து தெளியும் முன்னே
மறு நாளும் விடிந்து விடும்

முத்து குளிப்பவரே கொஞ்சம் பக்கத்திலே வாங்க

முக்கனிச் சாறெடுத்து எங்க கிண்ணத்திலே தாங்க

மூழ்கி எழுந்துவிட்டேன்
இந்த முத்தையும் கண்டெடுத்தேன்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கேட்டிராத பாடல்...

பாடல் வரிகளுக்கு நன்றி சார்...

NAGARAJAN சொன்னது…

Thanks for the song - listened after many many years.
It is Vijayanirmala only.

கருத்துரையிடுக