பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 28 டிசம்பர், 2012

சின்னச் சின்ன ரோஜா சிங்கார ரோஜா

அருமையான பாடல். ஒரு தந்தையின் அபிலாஷைகளை அழகாக சொல்லி இருக்கிறார் கவிஞர்

திரைப்படம்: அழகு நிலா (1962)
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்


http://asoktamil.opendrive.com/files/Nl80OTAyMTAwX0VVY1pQXzM3N2Y/Chinna%20chinna%20roja%20singara.mp3
சின்னச் சின்ன ரோஜா
சிங்கார ரோஜா
அன்ன நடை நடந்து
அழகாய் ஆடிவரும் ரோஜா
சின்னச் சின்ன ரோஜா
சிங்கார ரோஜா
அன்ன நடை நடந்து
அழகாய் ஆடிவரும் ரோஜா
சின்னச் சின்ன ரோஜா

கண்மணியே நீ வளர்ந்து
படித்திட வேண்டும்
கல்வியிலே கலைமகளாய்
விளங்கிட வேண்டும்
கண்மணியே நீ வளர்ந்து
படித்திட வேண்டும்
கல்வியிலே கலைமகளாய்
விளங்கிட வேண்டும்
ஷெண்பகமே பலரும்
புகழ்ந்திட வேண்டும்
ஷெண்பகமே பலரும்
புகழ்ந்திட வேண்டும்
செல்வத்திலே திருமகளாய்த்
திகழ்ந்திட வேண்டும்
நீ செல்வத்திலே திருமகளாய்த்
திகழ்ந்திட வேண்டும்
சின்னச் சின்ன ரோஜா
சிங்கார ரோஜா
அன்ன நடை நடந்து
அழகாய் ஆடிவரும் ரோஜா
சின்னச் சின்ன ரோஜா

கன்னியராம் தாரகைகள்
கூட்டத்திலே
நீ வெண்ணிலவாய்க் கொலுவிருக்கும்
நாள் வரவேண்டும்
கன்னியராம் தாரகைகள்
கூட்டத்திலே
நீ வெண்ணிலவாய்க் கொலுவிருக்கும்
நாள் வரவேண்டும்
கண்கவரும் கணவன்
கிடைத்திட வேண்டும்
கண்கவரும் கணவன்
கிடைத்திட வேண்டும்
காணும் ஆசைக் கனவெல்லாம்
பலித்திட வேண்டும்
நான் காணும் ஆசைக் கனவெல்லாம்
பலித்திட வேண்டும்
சின்னச் சின்ன ரோஜா
சிங்கார ரோஜா
அன்ன நடை நடந்து
அழகாய் ஆடிவரும் ரோஜா
சின்னச் சின்ன ரோஜா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக