பின்பற்றுபவர்கள்

சனி, 15 டிசம்பர், 2012

தண் நிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க

இன்னுமொரு அழகானப் பாடல் சுசீலா அம்மாவிடமிருந்து. மனதிற்கினிய மெல்லிசை இரட்டையர்கள் இசையில் ஆஹா என்ன சுகம் என்கிறது பாடல்.
இது மாயவனாதனின் மற்றுமொரு பாடல்.

http://www.mediafire.com/?v6apqrd65ykt92eதிரைப் படம்: படித்தால் மட்டும் போதுமா (1962)
பாடியவர்: P சுசீலா
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: மாயவனாதன்
இயக்கம்: பீம்சிங்க்
நடிப்பு: சிவாஜி, பாலாஜி, சாவித்திரி

தண் நிலவு தேனிறைக்க
தாழை மரம் நீர் தெளிக்க

தண் நிலவு தேனிறைக்க
தாழை மரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனை கண்டு நாணி நின்றாள்
நாணி நின்றாள்

தண் நிலவு தேனிறைக்க
தாழை மரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனை கண்டு நாணி நின்றாள்

நெஞ்சமதில் அலை எழும்ப
தஞ்ச மலர் அடி கலங்க
நெஞ்சமதில் அலை எழும்ப
தஞ்ச மலர் அடி கலங்க
அஞ்சி அஞ்சி இடை துவள வந்தாள்
அங்கு அன்பருள்ளம் தனை நினைந்து நின்றாள்
நினைந்து நின்றாள்

தண் நிலவு தேனிறைக்க
தாழை மரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனை கண்டு நாணி நின்றாள்

விண்ணளந்த மனம் இருக்க
மண்ணளந்த அடி எடுக்க
விண்ணளந்த மனம் இருக்க
மண்ணளந்த அடி எடுக்க
பொன்னளந்த உடல் நடுங்க வந்தாள்
ஒரு பூவளந்த முகத்தை கண்டு நின்றாள்
கண்டு நின்றாள்

தண் நிலவு தேனிறைக்க
தாழை மரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனை கண்டு நாணி நின்றாள்

ஆஹ ஹா  ஆ ஆ ஆஹ ஹா  ஹோ ஹோ ஹோ ஹோ 

பொட்டிருக்க பூவிருக்க
பூத்த மலர் மணமிருக்க
பொட்டிருக்க பூவிருக்க
பூத்த மலர் மணமிருக்க
கட்டிலுக்கும் மிக நெருங்கி வந்தாள்
இரு கண் விழியில் கவிதை கண்டு நின்றாள்
கண்டு நின்றாள்

தண் நிலவு தேனிறைக்க
தாழை மரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனைக் கண்டு நாணி நின்றாள்

2 கருத்துகள்:

NAGARAJAN சொன்னது…

தண்ணிலவு என்பதே சரி. குளுமையான நிலவு என்று பொருள்.

Unknown சொன்னது…

நன்றி நாகராஜன். இது தெரிந்தே செய்த தவறு. திருத்திக்கொள்ளப்பட்டது

கருத்துரையிடுக