பின்பற்றுபவர்கள்

சனி, 29 டிசம்பர், 2012

வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதடா

மீண்டும் இனிமை சேர்க்க வருகிறார்  P சுசீலா அம்மா. பாடலை செவி வழி கேட்கும் போது சோகத்திலும் ஒரு இனிமையான தாலாட்டு என்று தோன்றியது. ஆனால் படக் காட்சியில் யாரும் குழந்தைகள் இல்லை. அப்புறம் ஏன் கவிஞர் பாடலில் போகுதடா வருகுதடா என் 'தடா' போட்டார் என்பது விளங்கவில்லை.
மனதை மயக்கும் பாடல்.

திரைப் படம்: காதல் படுத்தும் பாடு (1966)
நடிப்பு: ஜெய்ஷங்கர், வாணிஸ்ரீ
இசை:  T R பாப்பா
இயக்கம்: ஜூனியர் ஜோசப் தளியத்
பாடல்: ஆலங்குடி சோமு










வெள்ளி நிலா வானத்திலே
வந்து போகுதடா
வெள்ளி நிலா வானத்திலே
வந்து போகுதடா

அது வந்து போன சுவடு
அந்த வானில் இல்லையடா
வானில் இல்லையடா

வெள்ளி நிலா வானத்திலே
வந்து போகுதடா

கொடி மடியில் ஊஞ்சல் போட்டுத்
தென்றல் போகுதடா
ஆ ஆ ஆ ஆ ஆ
கொடி மடியில் ஊஞ்சல் போட்டுத்
தென்றல் போகுதடா
அது ஊஞ்சல் போட்ட சுவடு
அந்தக் கொடியில் இல்லையடா
கொடியில் இல்லையடா

வெள்ளி நிலா வானத்திலே
வந்து போகுதடா
உள்ளத்திலும் காதல் நிலா
வந்து மின்னுதடா
ஆ ஆ ஆ ஆ ஆ
உள்ளத்திலும் காதல் நிலா
வந்து மின்னுதடா
அந்த ஊர்வலத்தின் சுவடு மட்டும் மறைவதில்லையடா
என்றும் மறைவதில்லையடா

வெள்ளி நிலா வானத்திலே
வந்து போகுதடா

1 கருத்து:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இனிமை சேர்க்கும் பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

கருத்துரையிடுக