பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்

ரொம்ப சிரமமான பாடலிது. பாடிய இருவரும் வெற்றிகரமாக பிரமாதமாக்கிவிட்டார்கள் . இவர்களின் வயதில் இப்படி பாடுவது ஒரு சாதனைதான்.
ஆனால் பாடலுக்கேற்ற உடையமைப்பில்லை. கர்னாடக இசையின் அடிப்படையில் அமைந்த பாடலுக்கு இந்த மாதிரி உடைகள்.
தமிழ் திரைப் படக் கனவுக் காட்சி. அப்படித் தான் இருக்கும்.

திரைப்படம்: சிரித்து வாழ வேண்டும் (1974)
பாடகர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் , S.ஜானகி
இசையமைப்பாளர்: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடலாசிரியர்: வாலி
நடிப்பு: எம்.ஜி,ஆர் , லதா
இயக்கம்: S S பாலன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2MzkzMF91N2ZKdF85MmFh/Konja%20Neram%20Ennai%20Marandhen.mp3


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்  
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
கடல் நீலம் என விழிக் கோலம் என்ன
கடல் நீலம் என விழிக் கோலம் என்ன
அந்தப் பார்வை எந்தன் மீதோ
அந்தப் பார்வை எந்தன் மீதோ
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
ஸ்  ஆ

கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்
குளிர் தென்றல் என தொடும் பாவம் என்ன
அந்தப் பார்வை எந்தன் மீதோ
அந்தப் பார்வை எந்தன் மீதோ
கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்
ஸ் ஆ
 

 செந்தேன் இதழ் நிறம் மாணிக்கமாக ஆ...ஆ...ஆ...
ஆ...ஆ...ஆ...
செந்தேன் இதழ் நிறம் மாணிக்கமாக
தந்திட வந்தேன் காணிக்கையாக
காணிக்கை ஏது நான் தரும் போது
காணிக்கை ஏது நான் தரும் போது
காதலில் சுவை ஏது நான் வழங்காது

கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன் ஸ்...ஆ...

நினைக்கையில் கொதிப்பாக அணைக்கையில் குளிராக
நினைக்கையில் கொதிப்பாக அணைக்கையில் குளிராக
இருப்பவள் இளமேனி எந்நாளும் உனக்காக
இருப்பவள் இளமேனி எந்நாளும் உனக்காக
ஆடவர் தொடும் நேரம் ஆசையில் உருவாகும்
ஆடவர் தொடும் நேரம் ஆசையில் உருவாகும்
 நாடகம் அரங்கேறும் மேடையும் நீயாகும்
நாடகம் அரங்கேறும் மேடையும் நீயாகும்

கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் ஆ...ஆ...ஆ...

வான் மழை தரும் நீரை வாங்கிய நிலம் போலே
நான் ஒரு சுகம் காண நேர்ந்தது உன்னாலே
மறைப்பது ஒரு பாதி மறந்தது ஒரு பாதி
மறைப்பது ஒரு பாதி மறந்தது ஒரு பாதி
எடுப்பதும் கொடுப்பதும் நமக்கினி சரி பாதி
எடுப்பதும் கொடுப்பதும் நமக்கினி சரி பாதி

கொஞ்ச நேரம் நம்மை மறந்தே
குளிர் தென்றல் வர இடம் இல்லை என
ஒன்று சேர்ந்தே சுகம் காண்போம்
ஒன்று சேர்ந்தே சுகம் காண்போம்
கொஞ்ச நேரம் நம்மை மறந்தே ஸ்...ஆ....

1 கருத்து:

SNR.தேவதாஸ் சொன்னது…

அன்பரே. வணக்கம்
எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

கருத்துரையிடுக