பின்பற்றுபவர்கள்

சனி, 4 மே, 2013

சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ

அன்பர் ராஷீத் கேட்டிருந்தார்.

P B ஸ்ரீனிவாஸ் வழக்கமாக கவிதை எழுதுவார். நான் நேரிலே பார்த்திருக்கிறேன். 25/30 வருடங்களுக்கு முன் சென்னை (Drive in Woodlands Hotel) வுட்லாண்ட் டிரைவ் இன் ஹோட்டலில் (கொஞ்சம் உயர்தர மக்கள் வரும் இடமாதலால் கூட்டம் குறைவாக இருக்கும்) மாலை நேரங்களில் அவரை சந்திப்பதுண்டு. தொடர்ந்து வருவார். நான் ஒரு முறை சந்தித்து பேசியதோடு சரி. அடிக்கடி பார்த்தாலும் சிரித்துக் கொள்வோமே தவிர அவரை தொந்திரவு செய்ததில்லை. அன்று அங்கு பணிபுரிந்தவர்களை கேட்டால் தெரியும். அப்போதெல்லாம் கையில் நோட்டுடன் கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பார். அதனால்தான் இணையத்தில் அந்தப் பாடலை அவர் எழுதினார் என்றவுடன் எனக்கும் அவர் எழுதியிருக்கலாம் எனத் தோன்றியது.

அவரது குரலில் பாடல்களே சிறப்பாக அமைந்திருக்கும் போது அவர் பாடல் எழுதியதை பற்றி நாம் அவ்வளவு கவலைப் பட தேவையில்லை என நினைக்கிறேன்.

இனிமையான, கருத்து நிறைந்த, வாழ்க்கையின் எதார்த்தத்தை, உணமைகளைச் சொல்லும் இந்தப் பாடல்.

திரைப் படம்: வாழ்க்கை படகு (1965)
பாடியவர்: P B ஸ்ரீனிவாஸ்
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெமினி, தேவிகா

http://asoktamil.opendrive.com/files/Nl8xMTU3MjM0Nl9lT2xwRl80NzRj/Chinna%20Chinna%20Kannanukku[128].mp3








சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ

கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா

சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ

பால் மணக்கும் பருவத்திலே
உன்னை போல் நானிருந்தேன்
பட்டாடை தொட்டிலிலே
சிட்டுப் போல் படுத்திருந்தேன்

அன்னாளை நினைக்கையிலே
என் வயது மாறுதடா
உன்னுடன் ஆடி வர
உள்ளமே தாவுதடா

கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ

ஒருவரின் துடிப்பினிலே
விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே
விளைவது மழலையடா

ஈரேழு மொழிகளிலே
என்ன மொழி பிள்ளை மொழி
கள்ளமற்ற வெள்ளை மொழி
தேவன் தந்த தெய்வ மொழி

கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ

பூப்போன்ற நெஞ்சினிலும்
முள்ளிருக்கும் பூமியடா
பொல்லாத கண்களடா
புன்னகையும் வேஷமடா

நன்றி கெட்ட மாந்தரடா
நான் அறிந்த பாடமடா
நன்றி கெட்ட மாந்தரடா
நான் அறிந்த பாடமடா

பிள்ளையாய் இருந்து விட்டால்
இல்லை ஒரு துன்பமடா

கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ

2 கருத்துகள்:

கீதமஞ்சரி சொன்னது…

எங்கள் பெண்ணுக்கு நாங்கள் பாடிய தாலாட்டுப் பாடல்களிலே அவளுக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது... இந்தப் பாடல் வேண்டுமென்றால் புன்னையோ தாமையோ பாட்டு என்று கேட்பாள். மனத்தை வருடும் அந்த இனிய குரல் இன்றும் உறக்கம் வாரா நாட்களில் நம்மைத் தாலாட்டி மனதை அமைதிப்படுத்தி உறங்கவைக்கிறது என்பது நமக்கெல்லாம் எவ்வளவு கொடுப்பினை! அற்புதமான பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி.

Raashid Ahamed சொன்னது…

தாங்கள் சொல்லி தான் ஞாபகம் எனக்கு வருகிறது. பிபிஸ்ரீனிவாஸ் அவர்கள் பாட்டெழுதுபவர் தான். ஏனென்றால் தஞ்சையில் ஒரு கோவில் திருவிழாவுக்கு அவரை அழைத்திருந்தனர். எனக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் சொல்வது 1990ல் அப்போது அவர் மும்முரமாக எதையோ எழுதிக்கொண்டிருந்தார். அவர் எழுதியது முதலில் பாடவேண்டிய பக்திப்பாடல் என்று பாடிமுடித்ததும் குறிப்பிட்டார். இது நானே எழுதியது.

கருத்துரையிடுக