பின்பற்றுபவர்கள்

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

நெஞ்சு பொருக்குதில்லையே நெஞ்சு பொருக்குதில்லையே

இன்றைய இந்தியாவின் நிலைமையை பார்த்தால் இப்படித்தான் பாடத் தோன்றுகிறதோ? அன்றும் இப்படித்தான் இருந்தததால் இதை மீசை கவிஞன்  பாடினான். இன்றும் நமது நிலைமை இப்படித்தான் என்றால் நாம் வாங்கிய சுதந்திரத்திற்கு என்ன அர்த்தம் என்பது விளங்கவில்லை.
பின்னர் யார்தான் இந்த சுதந்திரத்தால் பயன் அடைந்தவர்கள்?

மிகக் கோபமாக பாரதியாரால் பாடப் பெற்ற இந்தப் பாடல் திரைப் படத்தில் சோகமாக இசைக்கப் படுகிறது. ஒரு வேளை சுதந்திரத்திற்கு பின் எடுக்கப் பட்ட படமானதால் அந்த உத்வேகம் குறைக்கப் பட்டதோ?
மற்றபடி  சரித்திரப் படங்களில் வரும் பாரதியாரின் கோபமானப்  பாடல் எல்லாமே (வீர பாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் ) அப்படியே கொண்டுவரப் பட்டதாக நான் எண்ணுகிறேன்.

திரைப் படம்: பராசக்தி (1952)
இயக்குனர்: R கிருஷ்ணன் S பஞ்சு
இசை: R சுதர்சனம்
நடிகர்கள்: சிவாஜி, பண்டரிபாய்
பாடல் ஆக்கம்: மகா கவி பாரதியார்
பாடியவர்: C S ஜெயராமன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xOTQ3MTIyMF9vMHYzRV9iMmMy/nenju%20porukkuthillaiye.mp3






நெஞ்சு பொருக்குதில்லையே
நெஞ்சு பொருக்குதில்லையே
நெஞ்சு பொருக்குதில்லையே
நெஞ்சு பொருக்குதில்லையே
இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்
நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்
நெஞ்சு பொருக்குதில்லையே
நெஞ்சு பொருக்குதில்லையே

அஞ்சி அஞ்சி சாவார்
இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே
அஞ்சி அஞ்சி சாவார்
இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே
வஞ்சனை பேய்கள் என்பார்
இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார்
வஞ்சனை பேய்கள் என்பார்
இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார்
துஞ்சுது முகட்டில் என்பார்
மிக துயர் படுவார்
எண்ணி பயப்படுவார்
ஆங்கோர்
நெஞ்சு பொருக்குதில்லையே
நெஞ்சு பொருக்குதில்லையே

கஞ்சி குடிப்பதற்கில்லான்
அதன் காரணங்கள் இவையெனும் அறிவும் இலான்
பஞ்சமோ பஞ்சம் என்றே
நிதம் பரிதவித்து
உயிர் துடிதுடித்து
கஞ்சி குடிப்பதற்கில்லான்
கஞ்சி குடிப்பதற்கில்லான்
அதன் காரணங்கள் இவையெனும் அறிவும் இலான்
பஞ்சமோ பஞ்சம் என்றே
பஞ்சமோ பஞ்சம் என்றே
நிதம் பரிதவித்து
உயிர் துடிதுடித்து
துஞ்சி மடிகின்றாரே
இவர் துயர்களை தீர்க்க ஓர் வழியுமில்லை
அங்கோர்
நெஞ்சு பொருக்குதில்லையே
நெஞ்சு பொருக்குதில்லையே 

1 கருத்து:

கருத்துரையிடுக