பின்பற்றுபவர்கள்

புதன், 21 ஆகஸ்ட், 2013

தோடி ராகம் பாடவா

அமைதியானப் பாடல். சொக்க வைக்கும் புது நடையில் இனிய குரல்களில் வருகிறது.
இது இணைத் தரமேற்ற நீண்ட நாட்களாக  என் கையிருப்பில் இருந்த பாடல். இன்றுதான் வேளை வந்தது.

திரைப் படம்: மாநகர காவல் (1991)
பாடிய்வர்கள்: K J யேஸுதாஸ், K S சித்ரா
இசை: மறைந்த திரு சந்திர போஸ்
இயக்கம்: M தியாகராஜன்
நடிப்பு: விஜயகாந்த், சுமா ரங்கநாதன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjc3NjMyOV90QWJKal8wZjZk/Thodi%20Raagam%20Paadavaa.mp3


தோடி ராகம் பாடவா
மெல்ல பாடு
ஆதி தாளம் போடவா
மெல்ல போடு
மேனி என்னும் வீணை
மீட்டுகின்ற வேளை
மடியினில் உன்னை சேர்த்து

தோடி ராகம் பாடவா
மெல்ல பாடு
ஆதி தாளம் போடவா
மெல்ல போடு

இதுவரை உன்னை நானும்
இளையவன் என்னை நீயும்
காணாமல் கூடாமல் எங்கேயோ வாழ்ந்தோம்
முதல் முதல் முகம் பார்த்து
உடல் முழுவதும் வேர்த்து
நீராட போராட இன்னாளில் தீர்ந்தோம்
கல்யாணம் கச்சேரி கண்ணார
என்னாளில் காணலாம்
பொன் ஊஞ்சல் பூ பந்தல் வைபோகம்
தை மாதம் மாலையிடு

தோடி ராகம் பாடவா
மெல்ல பாடு
ஆதி தாளம் போடவா
மெல்ல போடு

இரவுகள் என்னை வாட்டும்
இடையினை அது கூட்டும்
நீ இன்றி நான் இங்கு பாய் போடும் மாது
பிரிவுகள் இனி ஏது
பிறவியில் கிடையாது
நீ தானே நான் வந்து பூச்சூடும் மாது
அன்றாடம் பூங்காற்று
உன் பேரை என் காதில் ஓதுது
எப்போது நான் வேண்டும்
அப்போது பூங்காற்றை தூது விடு

தோடி ராகம் பாடவா
மெல்ல பாடு
ஆதி தாளம் போடவா
மெல்ல போடு
மேனி என்னும் வீணை
மீட்டுகின்ற வேளை
மடியினில் என்னை சேர்த்து

தோடி ராகம் பாடவா
மெல்ல பாடு
ஆதி தாளம் போடவா
மெல்ல போடு

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அடிக்கடி (மனதில்) பாடும் அருமையான பாடல்.. நன்றி சார்..

Unknown சொன்னது…

நன்றி தனபாலன் ஸார் துப்பாக்கி குண்டை விட வேகம் ஸார் நீங்க...

Unknown சொன்னது…

அருமை அன்பரே பாட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி வரிகளை ஒரிஜினல் பாடலோடு கேட்டு பார்த்து வெளியிடவும் இன்னும் சிறப்பு

கருத்துரையிடுக