பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 16 மார்ச், 2014

கலையே உன் எழில் மேனி கனியாவதேன்

இரண்டு இசை வித்தகர்களின் குரலில் அட்டகாசமான பாடல்.
ஒரே பாடல்  இரண்டு முறை காட்சியாக வருவதுதான் புரியவில்லை. படத்தை பார்த்தால் புரியலாம். இனிய இசையும் பாடலும்.

 திரைப்படம்: கலை அரசி (1963)
 நடிப்பு: எம்.ஜி.ஆர், பானுமதி
 பாடகர்கள்: சீர்காழி.எஸ்.கோவிந்தராஜன்பானுமதி
 இசையமைப்பாளர்: கே.வி.மகாதேவன்
 பாடலாசிரியர்: கண்ணதாசன்
 இயக்குநர்: ஏ.காசிலிங்கம்


http://asoktamil.opendrive.com/files/Nl8zNDQ5MjYxOV9KWXByaV84ODRj/Kalaiye%20Unn%20Ezhil%20Meni.mp3













கலையே உன் எழில் மேனி கனியாவதேன்
காதல் கன நேரம் பிரிந்தாலும் கனல் ஆவதேன்
கலையே உன் எழில் மேனி கனியாவதேன்
காதல் கண நேரம் பிரிந்தாலும் கனல் ஆவதேன்
கலையே உன் எழில் மேனி கனியாவதேன்

உறவாடும் இவ்வேளை பிரிவென்பதேன்
நம் உயிரோடு உயிர் சேர்ந்து பெறும் இன்பத்தேன்
உறவாடும் இவ்வேளை பிரிவென்பதேன்
நம் உயிரோடு உயிர் சேர்ந்து பெறும் இன்பத்தேன்
இரு வேறு பொருள் கூறும் கண்பார்வை ஏன்
இரு வேறு பொருள் கூறும் கண்பார்வை ஏன்
ஒன்று நோய் தந்ததேன் ஒன்று மருந்தானதேன்

பருவத்தின் ஒரு பார்வை நோயாகுமே
எழில் உருவத்தின் துணை சேர மருந்தாகுமே

சிரிக்கின்ற இதழ்கூடக் கலைபேசுதே
சிரிக்கின்ற இதழ்கூடக் கலைபேசுதே
வாய் மணக்கின்ற மொழியாவும் கவிபாடுதே
கலையே உன் எழில் மேனி கனியாவதேன்
 கலையே உன் எழில் மேனி கனியாவதேன்
காதல் கன நேரம் பிரிந்தாலும் கனல் ஆவதேன்

நினைக்கின்ற நினைவுங்கள் நினைவானதே
அதில் பிறக்கின்ற நாணம் கலையானதே
நினைக்கின்ற நினைவுங்கள் நினைவானதே
அதில் பிறக்கின்ற நாணம் கலையானதே

எழில் அன்னமே எங்கும் உன் வண்ணமே

கலை மன்னவா எந்தன் உயிர் அல்லவா

எழில் அன்னமே எங்கும் உன் வண்ணமே

கலை மன்னவா எந்தன் உயிர் அல்லவா
கனம் கூடப் பிரியாமல் உறவாடுவோம்
நம் மனம் நாடும் சுகம் யாவும் தினம் காணுவோம்
கனம் கூடப் பிரியாமல் உறவாடுவோம்

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பல முறை ரசித்த இனிமையான பாட்டு...

கருத்துரையிடுக