பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே

 S  P B யின்  ஆரம்பக் காலப் பாடல். பெண் குரல் தேர்வு இனிமை. நல்ல அர்த்தம் மிக்க கவிதை வரிகளும் இசையும். 70களில் நல்ல வரவேற்பு பெற்ற பாடல்.

திரைப் படம்: ஏன் (1970)
இசை: T R பாப்பா
குரல்: S P B, சரளா
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: ரவிசந்திரன், லக்ஷ்மி
இயக்கம்: T R ராமண்ணா
  லா ல ல ல லல லல
லலலலல் லல லல
லாலாலா
வருவாயா வேல் முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
மங்கையின் கோயிலிலே

வருவாயா வேல் முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
தங்கையின் கோயிலிலே

அண்ணனுக்கு பெண் பார்க்க
வரும் அண்ணியை என் கண் பார்க்க

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹ்
ஹா ஹா ஹா ஹ் ம் ம் ம் ம்

அண்ணனுக்கு பெண் பார்க்க
வரும் அண்ணியை என் கண் பார்க்க

என் தங்கையின் துணையை நான் பார்க்க
அந்த இன்பத்தை நீ பார்க்க

நீ வருவாயா வேல் முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
தங்கையின் கோயிலிலே

மார்கழியில் மாயவனும்
 தை மாசியிலே நாயகனும்

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹ் ஹா ஹா ஹா ஹ்
ஹோ ஹோ ஹோ ஹோ

மார்கழியில் மாயவனும்
தை மாசியிலே நாயகனும்

திரு நாளுக்கு வருகின்ற விருந்தினர்கள்
அவர் பாவையின் உறவினர்கள்

நீ வருவாயா வேல் முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
மங்கையின் கோயிலிலே

முன்னவனோ ஆலமரம்
தம்பி முளைத்து வரும் தென்னமரம்

எங்கள் தோட்டத்தில் இங்கு மூன்று மரம்
எங்கள் வாழ்வே அன்பு மயம்

நீ வருவாயா வேல் முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம்
ஏற்றும் மங்கையின் கோயிலிலே

1 கருத்து:

கருத்துரையிடுக