பின்பற்றுபவர்கள்

திங்கள், 8 ஏப்ரல், 2013

மையை தொட்டு எழுதியவர் என் மனதை

ரொம்ப காலம் ஆயிடிச்சி இந்த பாடலை கேட்டு. இது மாதிரி பாடல்களை கேட்கும் போது K V மகாதேவன் அவர்களால் எப்படி இவ்வளவு ஜனரஞ்சகமாக (நான் மற்றைய எந்த இசையமைபாளர்களையும் ஒரு படி கூட  இறக்கி மதிப்பிடவில்லை. அவரவர்கள் திறமையை அவ்வப்போது சிறப்பித்து எழுதி  உள்ளேன்.) பாடல்களை மனதை பாதிக்கும் அளவுக்கு இசையமைக்க முடிகிறது என அதிசயப்பதுண்டு. அவரின் பல பாடல்கள் என் மனதில் இப்போது உருளுகிறது. அப்படியே மனதை கொள்ளைக் கொண்டு போகும் பாடல்கள் அவரது இசையில்.

இனி பாடலுக்கு வருவோம். பாடலின் படக் காட்சி கிடைக்கவில்லை. பாடல் வரிகளின் படி பார்த்தால், இரு பெண்கள் ஒரு ஹீரோவை எதிர்பார்த்து பாடுவது போல தெரிகிறது. பாடலின் முதல் வரியில் அந்த நாயகர் ஓவியராக இருக்கலாம் என்பது போல தோன்றுகிறது. இனிமையான பாடும் குரல்கள். நீங்களும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.


படம்: துளசி மாடம் (1963)
இசை: K V மகாதேவன்
நடிப்பு: விபரம் கிடைக்கவில்லை
இயக்கம்: K B ஸ்ரீனிவாசன்
பாடியவர்: S ஜானகி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
பாடல்: கே.எம்.ஷெரிஃப்

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDQyMTk0NF9rcU44MV9iNTI3/maiyai%20thottu%20ezhuthiyavar.mp3




மையை தொட்டு எழுதியவர்
என் மனதை தொட்டு
எழுதிவிட்டார்

மையை தொட்டு
எழுதியவர்
என் மனதை தொட்டு
எழுதிவிட்டார்

படத்தில் அழகாய்
சிரித்தவரே
என் பக்கத்தில் ஒரு நாள்
சிரித்திடுவார்

படத்தில் அழகாய்
சிரித்தவரே
என் பக்கத்தில் ஒரு நாள்
சிரித்திடுவார்

குடத்துள்
விளக்காய் இருக்கின்றேன்
மண கோலத்தில்
கையை பிடித்திடுவார்

கோலம் இட்டு
மாலை இட்டு
குத்து விளக்கை
ஏற்றி வைத்தே
கோலம் இட்டு
மாலை இட்டு
குத்து விளக்கை
ஏற்றி வைத்தே
காலம் எல்லாம்
வணங்குகிறேன்
பண் பாராய்
துளசி அம்மா
காலம் எல்லாம்
வணங்குகிறேன்
பண் பாராய்
துளசி அம்மா

மையை தொட்டு
எழுதியவர்
என் மனதை தொட்டு
எழுதிவிட்டார்

மீட்டிய
வீணை
நான் என்றால்
அதன் மெல்லிசை
இன்பம்
அவர்தானே
மீட்டிய
வீணை
நான் என்றால்
அதன் மெல்லிசை
இன்பம்
அவர்தானே
பாட்டு
பாடும்
நேரம் எல்லாம்
அதன் பல்லவி எல்லாம்
அவர் பெயர் தானே

கன்னியர் மனமோ காட்டாறு
அது காவிரி ஆறாய் மாறிடவே
கன்னியர் மனமோ காட்டாறு
அது காவிரி ஆறாய் மாறிடவே

மன்னவர் அவரே மாலை இட
மாதா நீ அருள் புரிவாய்
மன்னவர் அவரே மாலை இட
மாதா நீ அருள் புரிவாய்

மையை தொட்டு
எழுதியவர்
என் மனதை தொட்டு
எழுதிவிட்டார்

மையை தொட்டு
எழுதியவர்
என் மனதை தொட்டு
எழுதிவிட்டார்

சனி, 6 ஏப்ரல், 2013

பிரிவு என்பது என்றும் இல்லை

இயக்குனர் கலைமாமணி K.சோமு 1917 பிறந்தவர். 1994 இறந்தார்.
1967க்கு பிறகு இவர் இயக்கிய 23 படங்களும் வெளிவரவில்லை என்பது ஒரு சோகமான விஷயம்.
இன்றைக்கான பாடல் இடம் பெற்ற படமும் தணிக்கை முடிந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப் பட்ட பின்பும் வெளிவராத படம்.
இவர் இயக்கத்தில் த்தில் வெளியான சில படங்கள்:
மக்களைப் பெற்ற  மகராசி,
டவுன் பஸ்
பாவை விளக்கு
பட்டினத்தார்
நான் பெற்ற செல்வம் போன்ற வெற்றிப் படங்கள்.

இனிமையும் சுகமான வரிகளையும் கொண்ட இந்தப் பாடலை எழுதியவர் மற்றும் இந்தப் படத்திற்கான  இசையமைப்பாளர்  யாரென்று தெரியவில்லை.

திரைப் படம்: ஆஸ்திக்கொரு ஆணும் ஆசைக்கொரு பெண்ணும்
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், P சுசீலா


இயக்குனர்: K. சோமு

நடிப்பு: பிரேம் நசிர், M N ராஜம்

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDE5ODA0Ml96WTVzYl9iOTE2/Pirivu%20Enbathu.mp3



பிரிவு என்பது என்றும் இல்லை
பின்னிப் பிணைந்த
நம் வாழ்வினிலே
பிரிவு என்பது என்றும் இல்லை
பின்னிப் பிணைந்த
நம் வாழ்வினிலே
பெற்றோர் உற்றோர்
எதிர்த்த போதும்
கவலையே இல்லை
பிரிவு என்பது என்றும் இல்லை

பிரிவு என்பது என்றும் இல்லை
பின்னிப் பிணைந்த
நம் வாழ்வினிலே
பெற்றோர் உற்றோர்
எதிர்த்த போதும்
கவலையே இல்லை
பிரிவு என்பது என்றும் இல்லை

குறைவில்லா அன்பு என்னும்
செல்வமும் கொண்டு
நாம் குடும்பத்தையே நடத்திடலாம்
இன்பமும் கண்டு
குறைவில்லா அன்பு என்னும்
செல்வமும் கொண்டு
நாம் குடும்பத்தையே நடத்திடலாம்
இன்பமும் கண்டு

குன்றாக இருக்கும் பொருள்
குறைந்தே மாறலாம்
குன்றாக இருக்கும் பொருள்
குறைந்தே மாறலாம்
கொஞ்சும் அன்பு மட்டும்
குறையாது உண்மையிது
கொஞ்சும் அன்பு மட்டும்
குறையாது உண்மையிது
பிரிவு என்பது என்றும் இல்லை
பின்னிப் பிணைந்த
நம் வாழ்வினிலே
பெற்றோர் உற்றோர்
எதிர்த்த போதும்
கவலையே இல்லை
பிரிவு என்பது என்றும் இல்லை

சம்சாரம் தன்னை
ஒரு சாகரம் என்று
அதன் தன்மைதனை உணர்ந்தவர்கள்
சொல்வதும் உண்டு
சம்சாரம் தன்னை
ஒரு சாகரம் என்று
அதன் தன்மைதனை உணர்ந்தவர்கள்
சொல்வதும் உண்டு

அஞ்சாத நெஞ்சமெனும்
படகை கொண்டு நாம்
அஞ்சாத நெஞ்சமெனும்
படகை கொண்டு நாம்
அதிலே மிதப்பதுதான்
அழியாத ஆனந்தமே
அதிலே மிதப்பதுதான்
அழியாத ஆனந்தமே
பிரிவு என்பது என்றும் இல்லை
பின்னிப் பிணைந்த
நம் வாழ்வினிலே
பெற்றோர் உற்றோர்
எதிர்த்த போதும்
கவலையே இல்லை

பிரிவு என்பது என்றும் இல்லை
பின்னிப் பிணைந்த
நம் வாழ்வினிலே
பெற்றோர் உற்றோர்
எதிர்த்த போதும்
கவலையே இல்லை
பிரிவு என்பது என்றும் இல்லை

வியாழன், 4 ஏப்ரல், 2013

வீடு தேடி வந்தது நல்ல வாழ்வு என்பது

அழகான அமைதியான பாடல், அண்னன் தங்கை பாடல் வரிசையில். குழந்தை நடிகையாக பல படங்களில் நடித்தவர் சுமதி. அப்போதிருந்த  அவருக்கான ரசிகர்கள் அதிகம்.   வழக்கம் போல பின்னர் காணாமல் போனார்.
ஜி.கே.வெங்கடேஷ் இசைக்காகவும் பாடிய குரல்களுக்காகவும் பாடலை நிச்சயம் ரசிக்கலாம்.


திரைப் படம்: பெண்ணின் வாழ்க்கை
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், பி.சுசீலா
இசை: ஜி.கே.வெங்கடேஷ்
நடிப்பு: சுதாகர், சுமதி

http://asoktamil.opendrive.com/files/Nl85MzQ4NDg2X0I2SnVCXzhlN2M/veedu%20thedi%20vanthathu.mp3






வீடு தேடி வந்தது
நல்ல வாழ்வு என்பது
எதிர் பார்த்தது இன்று பூத்தது
நலம் ஆயிரம் நாம் காண
வீடு தேடி வந்தது
அன்னை தந்தை யாவும் என் அண்ணன் அல்லவோ
உன்னையன்றி வேறு ஓர் உலகம் உள்ளதோ
அன்பு முல்லை வாசம்
இந்த அண்ணன் தங்கை பாசம்
இது நாளும் வாழ வேண்டும்
வருங்காலங்கள் வண்ணக் கோலங்கள்
மின்னும் மாளிகையாகாதோ
வீடு தேடி வந்தது
நல்ல வாழ்வு என்பது
எதிர் பார்த்தது இன்று பூத்தது
நலம் ஆயிரம் நாம் காண
வீடு தேடி வந்தது
காலம் என்ற கடலில் நாம் கலங்கி வாடினோம்
கடவுள் செய்த கருணை நாம் கரையை நாடினோம்
நன்றி சொல்ல வேண்டும்
சொல்ல வார்த்தை என்ன தோன்றும்
இந்த உள்ளம் ஒன்று போதும்
ஒரு தாய் வழி வந்த பைங்கிளி
இன்று புன்னகை கொண்டாட
வீடு தேடி வந்தது
நல்ல வாழ்வு என்பது
எதிர் பார்த்தது இன்று பூத்தது
நலம் ஆயிரம் நாம் காண
வீடு தேடி வந்தது
அண்ணன் மாலை சூட ஓர் அண்ணி வேண்டுமே
தங்கை உன்னை காக்க ஓர் தலைவன் வேண்டுமே
மாமன் மகளை வேண்ட
உந்தன் மடியில் பிள்ளை தோன்ற
அதை நாமும் காண வேண்டும்
பல ஆசைகள் இந்த வேளையில் எண்ண ஊஞ்சலில் ஆடாதோ
வீடு தேடி வந்தது
நல்ல வாழ்வு என்பது
எதிர் பார்த்தது இன்று பூத்தது
நலம் ஆயிரம் நாம் காண
வீடு தேடி வந்தது

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

விழி தீபம் உன்னை தேடும் புது ராகம் மனம் பாடம்

இளைய நாயக நாயகி (அப்போதைய).
வித்தியாசமான இளமை ததும்பும் இசை.
தமிழ் திரைத்துறை அதிகம் அறிந்திராத  இசையமைப்பாளர்.
இனிக்கும் இளமையுடன் தித்திக்கும் பாடல்.

திரைப்படம்: கடைக்கண் பார்வை (1986)
இசை: V S நரசிம்மன்
பாடல்:மூ.மேத்தா
குரல்கள்: S P பாலசுப்ரமணியம், P சுசீலா
நடிப்பு: பாண்டியன், இளவரசி
இயக்கம்: ராஜ் ஸ்ரீதர்

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDE3NjQwN190VzlzSV84YWVl/VIZHIDEEPAM.mp3






 ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

விழி தீபம் உன்னை தேடும்
புது ராகம் மனம் பாடம்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை
விழி தீபம் உன்னை தேடும்
புது ராகம் மனம் பாடம்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை
விழி தீபம் உன்னை தேடும்
புது ராகம் மனம் பாடம்

உன் பாடல் கேட்டு
தென்றல் இளங்காற்று
உரசும் தழுவும் தினந்தோரும்
உன் பாடல் கேட்டு
தென்றல் இளங்காற்று
உரசும் தழுவும் தினந்தோரும்

பூவான எந்தன் நெஞ்சம்
என்னாளும் உந்தன் சொந்தம்
பூவான எந்தன் நெஞ்சம்
என்னாளும் உந்தன் சொந்தம்
கடைக்கண் பார்வை பேசாதோ

விழி தீபம் உன்னை தேடும்
புது ராகம் மனம் பாடம்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை
விழி தீபம் உன்னை தேடும்
புது ராகம் மனம் பாடம்

ஆனந்த வெள்ளம்
பொங்கி வரும் நேரம்
அடடா இதுபோல் சுகமேது
ஆனந்த வெள்ளம்
பொங்கி வரும் நேரம்
அடடா இதுபோல் சுகமேது

சந்தோஷ மாலை போட்டு
சங்கீத வீணை மீட்டு
சந்தோஷ மாலை போட்டு
சங்கீத வீணை மீட்டு
இதயம் கனவில் நீந்தாதோ

விழி தீபம் உன்னை தேடும்
புது ராகம் மனம் பாடம்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை

விழி தீபம் உன்னை தேடும்
புது ராகம் மனம் பாடம்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை

விழி தீபம் உன்னை தேடும்
புது ராகம் மனம் பாடம்

ஞாயிறு, 31 மார்ச், 2013

இன்பமான இரவிதுவே இதயம் ரெண்டும் மகிழ்வுறவே

இரவின் மடியில் வருகின்ற இந்தப் பாடலுக்கு ஏற்றவாறு அமைதியான குரல்கள், அமைதியான இசை, பாடல் வரிகள்.
ஆண்  பாடும் அதே பாடல் வரிக்கு சில மாற்றங்களுடன் பெண் பாடும் பாடல் வரி. இனிமை.
மதுர கீதம் என்றால் இதுதான்.

திரைப் படம்: மனிதன் மாறவில்லை (1962)
பாடியவர்கள்: பி  சுசீலா, ஏ.எல்.ராகவன்
இசை: கண்டசாலா
இயக்கம்: எம் ஜி சக்கரபாணி
நடிப்பு: ஜெமினி, சாவித்திரி
பாடல்: கண்ணதாசன்

http://asoktamil.opendrive.com/files/Nl85OTYyNDYyX3lxY2g3XzFiMTI/inbamana%20iravithuve.mp3






ம் ம்  ம் ம் ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இன்பமான இரவிதுவே
இன்பமான இரவிதுவே
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இன்பமான இரவிதுவே
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
சிந்தை மயக்கும் வெண்ணிலா விந்தை
மருந்தைத் தூவுதே

சிந்தை மயக்கும் வெண்ணிலா பன்னீர்
துளியைத் தூவுதே
இன்பமான இரவிதுவே
ஆஆஆஆஆஆ
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே

ஒருவர் பார்வை ஒருவர் மீது நறு மலர்
கணை வீசுதே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஒருவர் பார்வை ஒருவர் மீது நறு மலர்
மணம் வீசுதே
மலர்கள் வீசும் மணத்தினாலே விரக
தாபம் தணியுதே
ஆ 
மலர்கள் வீசும் மணத்தினாலே விரக
தாபம் தணியுதே
இன்பமான இரவிதுவே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மாங்குயிலின் மதுர கீதம் மனதில்
உணர்ச்சி தூண்டுதே
மாங்குயிலின் மதுர கீதம்
மனதையே தாலாட்டுதே
இனிமையான நினைவு அலையில்
இதயம் விரைந்து செல்லுதே

இனிமையான நினைவு அலையில்
இதயம் மிதந்து செல்லுதே
இன்பமான இரவிதுவே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இன்பமான இரவிதுவே
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
இன்பமான இரவிதுவே
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே