பின்பற்றுபவர்கள்

சனி, 11 செப்டம்பர், 2010

சிங்கார புன்னகை கண்ணாறக் கண்டாலே சிங்கீத வீணையும் ஏதுக்கம்மா...

இனிமையான தாலாட்டு பாடல்


படம்: மகாதேவி (1957)

இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: , சாவித்திரி
குரல்கள்: ராஜேஸ்வரி, R பாலசரஸ்வதி
இயக்கம்: M S சுந்தர் ராவ் நட்கர்னி
கதை: கண்ணதாசன்












சிங்கார புன்னகை கண்ணாறக் கண்டாலே

சிங்கீத வீணையும் ஏதுக்கம்மா...

மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே

தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா....

ஓ ஓ ஓ ஓ ஓ

சிங்கார புன்னகை கண்ணாறக் கண்டாலே

சிங்கீத வீணையும் ஏதுக்கம்மா...



கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்

எண்ணங்கள் கீதம் பாடுமே...

பேசாமல் பேசும் உருவங்கள் கண்டால்

பேசாத சிற்பங்கள் ஏதுக்கம்மா...

பேசாமல் பேசும் உருவங்கள் கண்டால்

பேசாத சிற்பங்கள் ஏதுக்கம்மா...

ஓ ஓ ஓ ஓ ஓ

சிங்கார புன்னகை கண்ணாறக் கண்டாலே

சிங்கீத வீணையும் ஏதுக்கம்மா...



ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ



செல்வமே என் ஜீவனே...

செல்வமே என் ஜீவனே...

ஆடும் கொடிய நாகங்களும்

அசைந்து வரும் நேரம்...

உன் அழகு முகம் கண்டுக் கொண்டால் அன்புக் கொண்டு மாறும்..

அன்புக் கொண்டு மாறும்..

அன்புக் கொண்டு மாறும்..



செல்வமே என் ஜீவனே...

எங்கள் செல்வமே எங்கள் ஜீவனே...

தன்மானச் செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்

வில்லேந்தும் வீரன் போலவே...ஏ ஏ ஏ ஏ ஏ...

தன்மானச் செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்

வில்லேந்தும் வீரன் போலவே...

மகனே நீ வந்தாய்...

மழலைச் சொல் தந்தாய்

வாழ் நாளில் வேறென்ன வேண்டுமம்மா...

மகனே நீ வந்தாய்...

மழலைச் சொல் தந்தாய்

வாழ் நாளில் வேறென்ன வேண்டுமம்மா...

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ



சிங்கார புன்னகை கண்ணாறக் கண்டாலே

சிங்கீத வீணையும் ஏதுக்கம்மா...

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

திரு அசோக் ராஜ் அவர்களே
கோடி கோடி வணக்கங்கள்.அருமையான பாடல் பொக்கிஷங்களுக்கு நன்றி.
இன்றைய இசையமைப்பாளர்கள் ( ?) இது போன்ற பாடல்களை கேட்டிருப்பார்களா ?
கேட்டிருந்தால்இன்றைய பாடல்கள் இந்த அவதி படுமா ?
வாழ்த்துக்கள்.


அன்புடன்
தாஸ்

கருத்துரையிடுக