பின்பற்றுபவர்கள்

புதன், 13 நவம்பர், 2013

தொட வரவோ தொந்தரவோ

தெலுங்கு  படம் தமிழாக்கப் பட்டது என்றாலும் இனிமையும்  சுவையும் நகைச்சுவையும் மாறாமல் தயாரிக்கப் பட்டது. பாடல்களில் சுந்தரத் தெலுகு வாடை அடித்தாலும், பாடலை பாடிய ஜாம்பவான்களின் குரல்களால் பாடல் நமது மனதில் தனியிடம் பிடிக்கின்றது.

திரைப் படம்: இரு நிலவுகள் (1978)
இசை: ராஜன்-நாகேந்த்ரா
பாடல்: வாலி என நினைக்கிறேன்
குரல்கள்: S ஜானகி, S P பாலசுப்ரமணியம்
இயக்கம்: சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்
நடிப்பு: கமல், ஜெய சுதா

http://asoktamil.opendrive.com/files/Nl8yNDkyMzMyOV9vNFpQNV9kZDc4/Thoda%20varavo%20Thontharavo%20-Iru%20Nilavugal-.mp3


தொட வரவோ
தொந்தரவோ
தொட வரவோ தொந்தரவோ
உனதுளமே சம்மதமோ
இடையோர் அழகோ சிறு நூல் அளவோ
ஆஹா அள்ளிடவோ

ஹா ஹா
தொட விடவோ தொடர்ந்திடவோ
உனதுளமே சம்மதமோ
இடையோ இதழோ இதுவோ அதுவோ
கேட்டால் நான் தரவோ
தொட விடவோ தொடர்ந்திடவோ
உனதுளமே சம்மதமோ

தொட வரவோ
ஹா
தொந்தரவோ
ஹா
உனதுளமே
ஹா
சம்மதமோ

மலரே நீ என்னை
இளமை அரசாள
எதிர் நின்ற யுவ ராணியோ
மடி மேலே வந்து
விழியால் மது வார்க்க
இதுதான் பொழுதல்லவோ

நான் தானே கள்ளு
அருகே வா அள்ளு
எனை வாங்க நீ இல்லையோ
பூஜை செய் என்று
பூவே முன் வந்து
மடியில் சாய்கின்றதோ

நீயோ என் ஊஞ்சல்
நானே பூந்தென்றல்
நெஞ்சில் நின்றாடத் தான்

தொட விடவோ தொடர்ந்திடவோ

உனதுளமே சம்மதமோ
ஹா ஹா
இடையோர் அழகோ சிறு நூல் அளவோ
ஹா
அள்ளிடவோ

தொட வரவோ தொந்தரவோ
உனதுளமே சம்மதமோ

தொடங்கிடவோ தொடர்ந்திடவோ
உனதுளமே சம்மதமோ

ஹா ஹா
ஆ ஆ
ஹே ஹே
ஆ ஆ
ஹே ஹே
ஆ ஆ ஆ
ஹோ ஹோ ஹோ ஹோ

குளிரில் நான் வாட
தவித்தேன் நீ கூட
அம்மாடி ஆசை மழை
மழையே பனி வாடை
வசமே மணல் வாடை
நீ வா காதல் மன்னா

மனதே என் மேடை
அழகே என் வீணை
பாட்டாக என் மோகினி
விழியால் என் அன்பை
விலை கொண்ட பூவை
இடையோ தேடும் எனை

நீயோ தாலாட்ட
ஏதோ தேன் ஊட்ட
நானே துணையாகவோ

தொட வரவோ தொந்தரவோ
உனதுளமே சம்மதமோ

இடையோ இதழோ இதுவோ அதுவோ
கேட்டால் நான் தரவோ

தொட விடவோ தொடர்ந்திடவோ
உனதுளமே சம்மதமோ

தொட வரவோ
தொந்தரவோ
உனதுளமே
சம்மதமோ

தொட வரவோ
ம்
தொந்தரவோ
ஹா ஹா
உனதுளமே
ஹா ஹா ஹா
சம்மதமோ
ம் 

தொட வரவோ
தொந்தரவோ
உனதுளமே
சம்மதமோ

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

இது நான் ரொம்ப ரசிக்கற பாட்டு. ரொம்ப ரசிச்சேன்.
Thanks.

கருத்துரையிடுக