பின்பற்றுபவர்கள்

சனி, 9 நவம்பர், 2013

இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்

Ballad of a Soldier, ஒரு போர் வீரனின் பாட்டு என்ற ருஷிய படத்தின் தழுவல்.

வழக்கம் போல K V மகாதேவனின், ஆழ் மனதை துருவிச் செல்லும் பாடல். எளிமையான பாடல் வரிகளும் இசையும் B வசந்தா அவர்களின் மென்மையான குரலும் மனதை நெகிழ வைக்கிறது.
இப் பாடல் காட்சியில் நடித்திருக்கும் நடிகை  தேவிகாவும் அழகாக கச்சிதமாக நடித்திருப்பார். இனிமையான பாடல்.


திரைப்படம்: தாயே உனக்காக (1966)
பாடியவர்: B வசந்தா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்

இயக்கம்: P புல்லையா,
நடிப்பு: சிவாஜி, பத்மினி, தேவிகா, ஜெயலலிதா 


http://asoktamil.opendrive.com/files/Nl8yNDk3MzAwM19Od0wzeV83ZDdh/Yesu%20Nathar%20pesinaal-thaye%20unakkaga.mp3இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்
இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்

பாவிகளே பாவிகளே உங்கள் பாதையைப் பாருங்கள்
பார்வையிலே பழுது வந்தால் தேவனைக் கேளுங்கள்

திருமணங்கள் யாவையுமே சொர்க்கத்தில் உருவாகும்
சேர்ப்பதுவும் பிரிப்பதுவும் தேவனின் விதியாகும்
சேர்ப்பதுவும் பிரிப்பதுவும் தேவனின் விதியாகும்
இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்

ஒரு வழியை மறு வழியால் மறைப்பது விதியாகும் 
அதை உணர்த்துவதே நானிருக்கும் சிலுவையின் அடையாளம்
சிலுவையிலே மனது வைத்தால் சிந்தனை தெளிவாகும்
சிந்தையிலே அமைதி வந்தால் வந்தது சுகமாகும்
சிந்தையிலே அமைதி வந்தால் வந்தது சுகமாகும்
இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக