பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 19 நவம்பர், 2013

யாரோ மன்மதன் கோயிலின் மணித் தேரோ

கங்கை அமரன் இசையில் கேட்பது போல உள்ளது இந்தப் பாடல். சந்திர போஸ் இசை என்பது நம்பமுடியவில்லை. பல  இடங்களை ராகம் தொட்டு வருகிறது பல பட்டறைப் போல். ஏதோ S P B அவ்வப் போது  பாடலை காப்பாற்றியுள்ளார்.


திரைப் படம் : ராசாத்தி ரோசாக்கிளி (1985)
இசை: சந்திரபோஸ்
குரல்: எஸ் பி பி
பாடல்: வைரமுத்து என நினைக்கிறேன்
இயக்கம்: S தேவராஜ்
நடிப்பு: ராஜேஷ், சுலக்ஷ்னா, சுரேஷ், நளினி

http://asoktamil.opendrive.com/files/Nl8yNTYyODk0Ml9rbUIyU180YWI4/Yaaro%20Manmathan%20-%20Rajathi%20Rojakili%20Tamil%20Song%20-%20YouTube.mp3


யாரோ மன்மதன்
கோயிலின் மணித் தேரோ
மானோ பொன்மணி
நகை இல்லா சிலைதானோ
கனவினில் வந்தது கவிதைகள் தந்தது
ஆனந்த பூவில் வந்த தேனோ
யாரோ மன்மதன்
கோயிலின் மணித் தேரோ

தாழம் பூபோல் செவியிலே
தவழ்ந்து ஆடும் வகையிலே
வானில் மின்னும் வெள்ளி மீன்போல்
வைரத்தோடு பதிக்கிறேன்
பாவை வண்ண கோவை
இதழ் பவளம் மெல்ல திறக்குமோ
யாரோ மன்மதன்
கோயிலின் மணித் தேரோ

நீல மேக குழலிலே
பூவைச்சூடும் பொழுதிலே
வெள்ளை பிறைப்போல் நெற்றிமீது
வண்ண திலகமிடுகிறேன்
பார்வை இசை கோர்வை
புது பாடல் ஒன்று படிக்குமோ

யாரோ மன்மதன்
கோயிலின் மணித் தேரோ
கனவினில் வந்தது கவிதைகள் தந்தது
ஆனந்த பூவில் வந்த தேனோ

யாரோ மன்மதன்
கோயிலின் மணித் தேரோ
யாரோ மன்மதன்
கோயிலின் மணித் தேரோ
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ் 

3 கருத்துகள்:

myspb சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
myspb சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
myspb சொன்னது…

அசோக் சார் .. படத்தகவல் தொடர்பாக எனக்கே கன்ப்யூசன் எப்படி என்று புரியவில்லையா என் பதிவில் பாருங்கள் உங்களுக்கே புரியும். எது உண்மை யார் விளக்குவார்கள்?

http://myspb.blogspot.com/2013/11/1423.html

கருத்துரையிடுக