பின்பற்றுபவர்கள்

சனி, 30 நவம்பர், 2013

இரவும் நிலவும் வளரட்டுமே

இனிமையான சங்கதிகளுடன் மிக சிரமமான பாடல். நடிப்பால் இமயங்களும் குரலால் இமயங்களும் வழங்கியுள்ள இனிமை கீதம்.

திரைப் படம்: கர்ணன் (1964)
நடிப்பு: சிவாஜி, N T ராம ராவ், சாவித்திரி, தேவிகா
குரல்கள்: டி எம் எஸ், P சுசீலா
இயக்கம்: B R பந்துலு
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்

http://asoktamil.opendrive.com/files/Nl8yNjM5NDg5MV8wV1NEbV9kODQ5/Iravum%20Nilavum.mp4

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே

தரவும் பெறவும் உதவட்டுமே
தரவும் பெறவும் உதவட்டுமே
நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே

இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
ஏ ஏ ஏ ஏ

மல்லிகை பஞ்சணை விரிக்கட்டுமே
அங்கு மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே
இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே
நெஞ்சில் இருக்கின்ற வரையில் எடுக்கட்டுமே

இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
ஏ ஏ ஏ ஏ

ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே
அங்கு அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
நாடகம் முழுவதும் நடக்கட்டுமே
அதில் நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே

இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும்
வளரட்டுமே
ஏ ஏ ஏ ஏ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக