பின்பற்றுபவர்கள்

வியாழன், 7 நவம்பர், 2013

ஓதுவார் உன் பெயர் ஓதுவார்

மோட்சத்தை காட்டும் பாடல்!!! பாடிய குரல்களின் இனிமையும் அசாதாரணமான இசையும் மனதை வசீகரிக்கிறது.

தேவார பாடலின் அடிப்படையில் பாடலாசிரியர் கவிதை அமைத்திருக்கிறார்.

ஆண்டாள் பெருமாளை பார்த்து பாடியது போன்று, இது ஒரு மங்கை சிவனை, கங்கை கொண்டானை, பிறைத் திங்கள் கொண்டானை பார்த்து பாடியதோ?

படக் காட்சி கிடைத்திருந்தால் அற்புதமாக இருந்திருக்கும்.

திரைப் படம்: கண்மலர் (1970)

குரல்கள்: பாலமுரளி கிருஷ்ணா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி

பாடல்: வாலி

இசை: கே வி மகாதேவன்

நடிப்பு: ஜெமினி கணேசன், B சரோஜா தேவி

இயக்கம்: பட்டு


http://asoktamil.opendrive.com/files/Nl8yMzY5MjQ3OF90YmM4Q183NDlj/othuvaar%20un%20peyar%20othuvaar.mp3
தோடுடைய செவி யன் விடையேறியோர் தூவெண் மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசியென்னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மல ரான்முனை நாட்பணிந்தேத்தவருள் செய்த
பீடுடைய பிர மாபுர மேவிய பெம்மானிவனன்றே.
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓம் ஓம் ஓம் ஓமெனும் மந்திர சொல்
உட்பொருள் நாடுவார்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓம் ஓம் ஓம் ஓமெனும் மந்திர சொல்
உட்பொருள் நாடுவார்

ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓதாமல் ஒரு நாளும் இருப்பதில்லை
உந்தன் பாதார விந்தத்தை மறப்பதில்லை
ஓதாமல் ஒரு நாளும் இருப்பதில்லை
உந்தன் பாதார விந்தத்தை மறப்பதில்லை
நாதா உன் திரு நாமம் கசப்பதில்லை
நாதா உன் திரு நாமம் கசப்பதில்லை
எங்கள் ஆதாரமான இடம் உனது திரை
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்

கங்கைக் கொண்டான் என் மேல் கருணைக் கொண்டான்
பிறைத் திங்கள் கொண்டான் நெஞ்சை திருடிக் கொண்டான்
கங்கைக் கொண்டான் என் மேல் கருணைக் கொண்டான்
பிறைத் திங்கள் கொண்டான் நெஞ்சை திருடிக் கொண்டான்
மங்கைக் கொண்டான் எனது மனத்தைக் கொண்டான்
மங்கைக் கொண்டான் எனது மனத்தைக் கொண்டான்
இவையாவையும் கொண்டான் உந்தன் மாலையும் கொண்டான்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓம் ஓம் ஓம் ஓமெனும் மந்திர சொல்
உட்பொருள் நாடுவார்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக