பின்பற்றுபவர்கள்

வியாழன், 21 நவம்பர், 2013

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்

சிலர் சிரிப்பதையும் சிலர் அழுவதையும் கொண்டே கவியரசர் பல பாடல்களை புனைந்திருந்தாலும் ஒவ்வொரு பாடலும் அதனதன் வகையில் சிறந்த பாடல்களே. முத்தான கவிதை வரிகள் நிறைந்த பாடல்.

திரைப் படம்: பாவ மன்னிப்பு
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: சிவாஜி, தேவிகா, ஜெமினி, சாவித்திரி
இயக்கம்: A பீம்சிங்
குரல்: டி எம் எஸ்


http://asoktamil.opendrive.com/files/Nl8yNTYyODk0Ml9rbUIyU180YWI4/Yaaro%20Manmathan%20-%20Rajathi%20Rojakili%20Tamil%20Song%20-%20YouTube.mp3

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்

நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

பாசம் நெஞ்சில் மோதும்
அந்தப்பாதையை பேதங்கள் மூடும்
உறவை எண்ணி சிரிக்கின்றேன்
உரிமையில்லாமல் அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்

நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

கருணை பொங்கும் உள்ளம்
அது கடவுள் வாழும் இல்லம்
கருணை மறந்தே வாழ்கின்றார்
கடவுளைத்தேடி அலைகின்றார்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்

நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

காலம் ஒரு நாள் மாறும்

நம் கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்

நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக