பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 2 மே, 2014

எத்தனை எத்தனை இன்பமடா இவை எல்லாம் உனக்கே சொந்தமடா

கல்யாண் குமார் எழுபதுகளில் எல்லாவற்றையும் இழந்து விட்டு சொந்த வீடு கார் எதுவும் இல்லாமல் நான் சந்தித்த தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மிகவும் சாதாரணமாக இருந்தவர் . சாகும் வரை அதே நிலை தான் . நாற்பது வருடங்களுக்கு மேல் சென்னையிலேயே தான் கல்யாண் குமார் வாழ்ந்திருக்கிறார் .
அதே சமயம் ஸ்ரீதர் அந்தஸ்திலிருந்த பிற கதாநாயகர்கள் ஜெமினி ,சிவாஜி , எம்ஜியார் ஆகியோருடன் மட்டுமல்ல கமல் ,ரஜினி என்ற வரை “Rapport” சரியாக Maintain பண்ணியிருக்கிறார். சினிமாவில் மனித உறவுகள் இந்த அளவுக்கு தான் என்கிறார் திரு R P ராஜநாயஹம் தனது பதிவில்.

வைர வரிகள் கொண்ட பாடல். யார் எழுதியது எனத் தெரியவில்லை.

திரைப் படம்: யாருக்கு சொந்தம் (1963)
இசை: K V மகாதேவன்
இயக்கம்: K V  ஸ்ரீனிவாசன்
பாடியவர்: பி பி ஸ்ரீனிவாஸ்
நடிப்பு: கல்யாண்  குமார், தேவிகா
பாடல்: 

http://asoktamil.opendrive.com/files/Nl8zNjcwOTY1OF9KdHVEUV82MWE0/Ethanai%20Ethanai%20Inbamada-Yarukku%20Sontham.mp3எத்தனை எத்தனை இன்பமடா
இவை எல்லாம் உனக்கே சொந்தமடா
எத்தனை எத்தனை இன்பமடா

இவை எல்லாம் உனக்கே சொந்தமடா

மரம் படைத்தான் ஒரு கொடி படைத்தான்
அந்த மரத்தைத் தழுவி அதை படர வைத்தான்
படர வைத்தான்
மரம் படைத்தான் ஒரு கொடி படைத்தான்
அந்த மரத்தைத் தழுவி அதை படர வைத்தான்


மலர் படைத்தான் நறு மணம் கொடுத்தான்
அதில் வடியும் தேனையும் உனக்களித்தான்
மலர் படைத்தான் நறு மணம் கொடுத்தான்
அதில் வடியும் தேனையும் உனக்களித்தான்

எத்தனை எத்தனை இன்பமடா
இவை எல்லாம் உனக்கே சொந்தமடா

உன்னை படைத்தான் ஒரு பெண்ணை படைத்தான்
காதல் உறவு கொள்ளவும் வழி வகுத்தான்
வழி வகுத்தான்
பொன்னை படைத்தான் பல பொருள் படைத்தான்
இந்த பூமியில் சொர்க்கம் காண வைத்தான்
பொன்னை படைத்தான் பல பொருள் படைத்தான்
இந்த பூமியில் சொர்க்கம் காண வைத்தான்

எத்தனை எத்தனை இன்பமடா
இவை எல்லாம் உனக்கே சொந்தமடா

கண் கொடுத்தான் நீ காண்பதற்கு
பல காட்சி தந்தான் கண்டு களிப்பதற்கு
களிப்பதற்கு
கண் கொடுத்தான் நீ காண்பதற்கு
பல காட்சி தந்தான் கண்டு களிப்பதற்கு
 
மனம் கொடுத்தான் ஒன்றை நினைப்பதற்கு
நல்ல மதி கொடுத்தான் எண்ணிப் பார்ப்பதற்கு
மனம் கொடுத்தான் ஒன்றை நினைப்பதற்கு
நல்ல மதி கொடுத்தான் எண்ணிப் பார்ப்பதற்கு

எத்தனை எத்தனை இன்பமடா
இவை எல்லாம் உனக்கே சொந்தமடா
ஹா ஹ ஹ ஹ ஹா
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக