பின்பற்றுபவர்கள்

சனி, 17 மே, 2014

சங்கே முழங்கு சங்கே முழங்கு

இது எந்தக் காலத்திற்கும் ஏற்ற பாடல். எப்போதும் என்றும் உடல் முருக்கேற்றக் கூடிய பாடல்.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு"

இனி நமது மக்களுக்கு நாட்டுப் பற்று தொடரும் என நம்பலாம். இது இந்தியனே இந்தியனை ஆளும் காலம்.
நாம் தமிழன் என்பதை விட நாம் இந்தியன் என நம்பும் காலமாகட்டும்.

இந்திய நாட்டு மக்களுக்கு எனது salute.

திரைப்படம்: கலங்கரை விளக்கம் (1965)
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா
பாடல் இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
இயக்கம்: K சங்கர்
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி.


சங்கே முழங்கு
சங்கே முழங்கு

சங்கே முழங்கு
சங்கே முழங்கு

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
ஆஆஆஆஆஆஆஆ


பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு

சங்கே முழங்கு
சங்கே முழங்கு
சங்கே முழங்கு

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும்
பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்

ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே
சங்கே முழங்கு
ஆஆஆ ஆஆஆஆஆ


வெங்கொடுமைச் சாக்காட்டில்
விளையாடும் தோள் எங்கள் வெற்றித் தோள்கள்
ஆஆஆஆஆஆஆஆஆஆ

கங்கையைப் போல் காவிரி போல்
கருத்துக்கள் ஊறும் உள்ளம்
எங்கள் உள்ளம்

வெங்குருதி தனிழ்கமழ்ந்து
வீரஞ்செய்கின்ற தமிழ்
எங்கள் மூச்சாம்

தமிழ் எங்கள் மூச்சாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக