பின்பற்றுபவர்கள்

புதன், 21 மே, 2014

தென்றல் அது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ

 அந்த 7 நாட்கள் இனிமையான பாடல்கள் நிறைந்த திரைப் படம். இன்று ஒரு இனிமையான பாடல்.

திரைப் படம்: அந்த 7 நாட்கள் (1981)
குரல்கள்: P ஜெயசந்திரன், S ஜானகி
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: K பாக்யராஜ், அம்பிகா
இயக்கம்: K பாக்யராஜ்
ச க ம ப க ம க ச
நி ச நி ப க ம நி ப ச ச
ச க ம ப க ம க ச
நி ச நி ப க ம நி ப ச 

க க ரி ம ம க ப ப ம த ரி நி ச

தென்றல் அது உன்னிடத்தில்
சொல்லி வைத்த சேதி என்னவோ
தென்றல் அது உன்னிடத்தில்
சொல்லி வைத்த சேதி என்னவோ

பெண்மையின் சொர்க்கமே
பார்வையில் வந்ததோ
காவியம் தந்ததோ

தென்றல் அது உன்னிடத்தில்
சொல்லி வைத்த சேதி என்னவோ

உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை
இன்று தங்கரதம் ஏறியது

உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை
இன்று கங்கை என மாறியது
உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை
இன்று கங்கை என மாறியது

இது வரை கனவுகள் இளமையின் நினைவுகள்
ஈடேறும் நாளின்று தான்

எது வரை தலைமுறை அதுவரை தொடர்ந்திடும்
என்னாசை உன்னோடுதான்

பெண்மையின் சொர்க்கமே
பார்வையில் வந்ததோ
காவியம் தந்ததோ

தென்றல் அது உன்னிடத்தில்
சொல்லி வைத்த சேதி என்னவோ

சந்தம் தேடி சிந்து பாடி
உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்

தஞ்சை கோவில் சிற்பம் போலே
ஒரு முத்திரையை நான் பதிப்பேன்
தஞ்சை கோவில் சிற்பம் போலே
ஒரு முத்திரையை நான் பதிப்பேன்

அனுதினம் இரவெனும் அதிசய உலகினில்
ஆனந்த நீராடுவோம்

தினமொரு புது வகை கலைகளை அறிந்திடும்
ஏகாந்தம் நாம் பாடுவோம்


பெண்மையின் சொர்க்கமே
பார்வையில் வந்ததோ
காவியம் தந்ததோ

தென்றல் அது உன்னிடத்தில்
சொல்லி வைத்த சேதி என்னவோ

பெண்மையின் சொர்க்கமே
பார்வையில் வந்ததோ
காவியம் தந்ததோ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக