பின்பற்றுபவர்கள்

திங்கள், 19 மே, 2014

டேய் வாடா ராஜா வாடா கண்ணு கண்கள் உன் பக்கம்

கவிஞர் வித்தியாசமான முறையில் கவிதை எழுதியிருக்கிறார். காதலனும் காதலியும் ஒருத்தரை ஒருத்தர் குழந்தையாக பாவித்து பாடுவது போல அமைந்துள்ளது. இனிமையான இசையும் பாடிய குரல்களும் பாடலுக்கு வளம் சேர்கின்றன.

திரைப் படம்: கை நிறைய காசு (1974)
இசை: சங்கர் கணேஷ்
நடிப்பு: நாகேஷ், பிரமிளா, ஸ்ரீகாந்த்.
இயக்கம்: A B ராஜ்
பாடியவர்கள்: எஸ் பி பி, P சுசீலா
பாடல்: கண்ணதாசன்http://asoktamil.opendrive.com/files/Nl8zNTU2NDgxNF9hbG9ma182ZmU3/De%20Vada%20Raja%20Vada%20Kannu.mp3


டேய் வாடா ராஜா வாடா கண்ணு
கண்கள் உன் பக்கம்

வண்ணப் பூ வனம்
முத்து மாணிக்கம்

உன் முகம்
உன் முகம்
உன் முகம்
உன் முகம்


ஏய் வாடி கண்ணே வாடி இங்கே
கைகள் உன் பக்கம்

இந்த மாங்கனி உந்தன் மார்பினில்
ஆடவேண்டும் கூட வேண்டும்


கூடும் போது பாட வேண்டும்


கொடி விட்ட பூவினில்
மோதுது காற்று
காரணம் கேட்டு விடு

மணி மின்னும் கைகளைத்
தோள்களில் போட்டு
மயக்கத்தில் தீர்த்துவிடு

மயக்கத்தில் தீர்த்துவிடு


பொன் மலர் செண்டுகள்
கண்களில் கண்டதும்

பொன் மலர் செண்டுகள்
கண்களில் கண்டதும்

பொய்கையின் வண்டுகள் ஆடாதோ

பொய்கையின் வண்டுகள் ஆடாதோ


டேய் வாடா ராஜா வாடா கண்ணு
கண்கள் உன் பக்கம்

வண்ணப் பூ வனம்
முத்து மாணிக்கம்

உன் முகம்
உன் முகம்
உன் முகம்
உன் முகம்

நாட்டியப் பாவையின் பூட்டிய மேனி
தீட்டிய ஓவியமோ


அது காட்டிய நாடகம் மாப்பிள்ளை கண்களில்
கூட்டிய காவியமோ

கூட்டிய காவியமோ


ஊற்றிய பாலிடை


ஊறியத் தேனென
ஊற்றிய பாலிடை

ஊறியத் தேனென


நாளைய இன்பங்கள் ஆயிரமோ


நாளைய இன்பங்கள் ஆயிரமோ


டேய் வாடா ராஜா வாடா கண்ணு
கண்கள் உன் பக்கம்

வண்ணப் பூ வனம்
முத்து மாணிக்கம்

உன் முகம்
உன் முகம்
உன் முகம்
உன் முகம்


ஏய் வாடி கண்ணே வாடி இங்கே
கைகள் உன் பக்கம்

இந்த மாங்கனி உந்தன் மார்பினில்
ஆடவேண்டும் கூட வேண்டும்


கூடும் போது பாட வேண்டும்


லா லாலாலாலாலாலாலா ல ல ல லா லா லா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக