பின்பற்றுபவர்கள்

வியாழன், 8 மே, 2014

ஒருவன் காதலன் ஒருத்தி காதலி

இந்தப் படத்தின் எல்லா பாடல்களுமே classic வகையை சேர்ந்தவைதான். அதுவும் ஸ்ரீதரின் நடிகர்கள் தேர்வு எப்போதுமே விஷேசமாகவே இருக்கும். இந்த படத்தில் அனைவரும் புது முகங்கள். எல்லோருக்கும் முதல் படம். இளமை இளமை இளமைதான். அனைவரும் அழகாக நடித்திருப்பார்கள்.

திரைப் படம்: வெண்ணிற ஆடை (1965)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாஸ், P சுசீலா
நடிப்பு: ஸ்ரீகாந்த்,ஜெயலலிதா
இயக்கம்: C V ஸ்ரீதர்
பாடல்: கண்ணதாசன்http://asoktamil.opendrive.com/files/Nl8zODIzOTg2OV9OTUJ3bF8zZjQ2/oruvan%20kathalan.mp3

ஒருவன் காதலன்
ஒருத்தி காதலி
ஒருவன் காதலன்
ஒருத்தி காதலி

உறவு ஹோ ஹோ ஹோ என்றது
என்றதோ
என்றது

அருகில் வா வா வா என்றது
என்றதோ
என்றது
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஒருவன் காதலன்
ஒருத்தி காதலி
ஒருவன் காதலன்

அந்த வானத்திலே ஓர் வெண்ணிலவு
மலர் மஞ்சத்திலே ஓர் பெண்ணிலவு
அந்த வானத்திலே ஓர் வெண்ணிலவு
மலர் மஞ்சத்திலே ஓர் பெண்ணிலவு

புது வாழ்க்கையிலே வரும் முதலிரவு
அது மலருக்கும் வண்டுக்கும் தேனிலவு
ஓ ஹோ ஹோ ஹோ ஹோ

உறவு ஹோ ஹோ ஹோ ஹோ என்றது
என்றதோ
என்றது
அருகில் வா வா வா என்றது
என்றதோ
என்றது
ஹோ ஹோ ஹோ ஹோ

ஒருவன் காதலன்
ஒருத்தி காதலி
ஒருவன் காதலன்

ஒரு நாளுக்கு நாள் உடல் மெருகேற
அந்த நாடகத்தால் இதழ் நிறம் மாற
ஒரு நாளுக்கு நாள் உடல் மெருகேற
அந்த நாடகத்தால் இதழ் நிறம் மாற

அவர் தோளுக்கு தோள் கண்ட சுகம் கூற
அரை தூக்கத்தில் இருந்தார் மனமார
ஹோ ஹோ ஹோ
உறவு ஹோ ஹோ ஹோ  என்றது
என்றதோ
என்றது
அருகில் வா வா வா என்றது
என்றதோ
என்றது

ஒருவன் காதலன்
ஒருத்தி காதலி
ஒருவன் காதலன்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்தப் பாடல் கேட்டு அதிக நாளாச்சி... நன்றி...

பால கணேஷ் சொன்னது…

இனிமையான பாடல். ஸ்ரீதரின் படங்களில் எப்போதுமே பாடல்கள் இனிமையாகவும் அதை அழகழகான கேமரா கோணங்களில் ஸ்ரீதர் காட்சிப்படுத்தும் அழகும் போட்டிபோடும். இந்தப் படத்தில் நிர்மலா, ஜெயலலிதா இருவர் முகங்களிலும் இளமையும் அப்பாவித்தன அழகு இருக்கும். மறக்க முடியாத ஸ்ரீதர்.

கருத்துரையிடுக