பின்பற்றுபவர்கள்

சனி, 10 மே, 2014

மௌனமே பார்வையால் ஒரு பாட்டு



இந்தப் பாடல் முடியும் நேரத்தில் காதோலியில் இருப்பது போல கடைசி வரி வரையில் படத்திலேயே இல்லை.
பாடலுக்கு  முன் இசையை ஆரம்பித்து பாடலை அதனுடன் இணைத்திருக்கும் விதம் (Synchronization) அருமை. இசையும் பாடகரின் குரலும் இழையோடும் அழகு இது போல சில பாடல்களில் மட்டுமே உண்டு.
பாடலின் ஒவ்வொரு வரியுமே அசத்தல்.

"முன்னம் இருக்கும் இந்தச் சின்ன முகத்தில்
பல மொழிகள் பாடம் பெற வர வேண்டும்"




திரைப்படம்: கொடிமலர் (1966)
பாடியவர்: பி. பி. ஸ்ரீநிவாஸ்
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

நடிப்பு: முத்துராமன், விஜயகுமாரி 
இயக்கம்: சி வி ஸ்ரீதர்





http://asoktamil.opendrive.com/files/Nl8zODAwMDA0OF84Z1JwbV85M2Zi/mouname%20paarvaiyal.mp3

















மௌனமே பார்வையால்
ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால்
ஒரு வார்த்தை பேச வேண்டும்
மௌனமே பார்வையால்
ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால்
ஒரு வார்த்தை பேச வேண்டும்

அல்லிக்கொடியே உன்தன் முல்லை இதழும்
தேனாறு போல பொங்கி வர வேண்டும்
வர வேண்டும்
அல்லிக்கொடியே உன்தன் முல்லை இதழும்
தேனாறு போல பொங்கி வர வேண்டும் 

அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகை போல்
என்னை அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும்
என்னை அள்ளிச் சூடிக்கொண்டு விட வேண்டும்
ம்

மௌனமே பார்வையால்
ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால்
ஒரு வார்த்தை பேச வேண்டும்

முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
மொழி வேண்டும்
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும் 


முன்னம் இருக்கும் இந்தச் சின்ன முகத்தில்
பல மொழிகள் பாடம் பெற வர வேண்டும்
பல மொழிகள் பாடம் பெற வர வேண்டும்
ம்

மௌனமே பார்வையால்
ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால்
ஒரு வார்த்தை பேச வேண்டும்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக