இலக்கண சுவைகளுடன் எழுதி பாடப் பட்ட ஒரு நல்ல பாடல். ஆனால் படம் தேறவில்லை என நினைக்கிறேன்.
திரைப் படம்: தர்மம் எங்கே
குரல்கள்: P சுசீலா, T M S
இசை: M S விஸ்வனாதன்
பாடல் : கண்ணதாசன்
நடிப்பு: சிவாஜி, ஜெயலலிதா
இயக்கம்: A C திருலோகசந்தர்
http://www.divshare.com/download/15724910-c2b
பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே - உன்
பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே
பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே - உன்
பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே - உன்
அணைப்பினில் சாய்ந்ததய்யா இந்த மலரே
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே - உன்
அணைப்பினில் சாய்ந்ததய்யா இந்த மலரே
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆ ஆ ஆ ஆ ஆ
முத்துக்களை சிந்தி சிந்தி புன்னகை என்றாய்
மூடி வைத்த தேன் குடத்தை அங்கங்கள் என்றாய்
முத்துக்களை சிந்தி சிந்தி புன்னகை என்றாய்
மூடி வைத்த தேன் குடத்தை அங்கங்கள் என்றாய்
பத்துத் தரம் தொட்டு தொட்டு பாவனை செய்தாய்
பள்ளி கொள்ளும் முன்பு என்ன சோதனை செய்தாய்..
சோதனை செய்தாய்..
பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே - உன்
பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே
தென்றல் வந்து மெல்ல மெல்ல உன்னைத் தழுவும்
தென்றலுக்குப் பாதை இன்றி என்னைத் தழுவு
தென்றல் வந்து மெல்ல மெல்ல உன்னைத் தழுவும்
தென்றலுக்குப் பாதை இன்றி என்னைத் தழுவு
உள்ள மட்டும் இன்பமெல்லாம் அள்ளி வழங்கு
உச்சி முதல் பாதம் வரை உந்தன் விருந்து..
உந்தன் விருந்து
பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே - உன்
பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே - உன்
அணைப்பினில் சாய்ந்ததய்யா இந்த மலரே
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக