பின்பற்றுபவர்கள்

திங்கள், 17 அக்டோபர், 2011

தவிக்குது தயங்குது ஒரு மனது தினம் தினம் தூங்காமலே ஒரு சுகம் காணாமலே


திரு கணேஷ் அவர்களின் விருப்பப் பாடல். அழகான பாடல். நமக்கும் பிடித்த பாடல்தான்.

திரைப் படம்: நதியை தேடி வந்த கடல் (1980)
நடிப்பு: சரத் பாபு, ஜெயலலிதா
இயக்கம்: லெனின்
இசை: இளையராஜா
குரல்கள்: K J யேசுதாஸ், சைலஜா



http://www.divshare.com/download/15919249-c7a



தவிக்குது தயங்குது ஒரு மனது
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
அது தொடர்ந்து எனை படர்ந்து
ஏதோ சொல்கின்றது
மனம் எங்கோ செல்கின்றது
தவிக்குது தயங்குது ஒரு மனது

ஏதோ ஒன்று நெஞ்சிலே
எழுந்ததென்ன உன்னிலே
எங்கோ சென்ற கண்ணிலே
ஏக்கம் என்ன பெண்ணிலே
மலர்ந்திடாத ஆசையே
மலருகின்ற நேரமே
எண்ணிய சுகம் என்னுடன் வரும்
லா லல லல
கனி இதழ் சுவைதனில்
காதல் நீராடு
தவிக்குது தயங்குது ஒரு மனது

பொங்கும் ஆசை ஆற்றிலே
நனைந்ததெந்தன் உள்ளமே
எங்கும் இன்ப வெள்ளமே
எழுந்து பாய்ந்து செல்லுமே
தொன்றுகின்ற தாகமே
தொடருகின்ற காலமே
பார்ப்பதில் சுகம்
பலவித ரகம்
லா லல லல
பசிகொரு உணவென
பாவை நீ வா வா
தவிக்குது தயங்குது ஒரு மனது

கங்கை கொண்ட சோழனின்
கனவில் வந்த தேவியே
மங்கை எந்தன் வாழ்விலே
மன்னன் நீயும் பாதியே
சிலையை போன்ற தோற்றமே
தினமும் என்னை வாட்டுமே
இன்னிசை சுகம் இன்பங்கள் தரும்
லா லல லல
இரவிலும் பகலிலும்
மீட்ட நீ வா வா

தவிக்குது
தயங்குது
ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
அது தொடர்ந்து எனை படர்ந்து
ஏதோ சொல்கின்றது
மனம் எங்கோ செல்கின்றது
எதோ சொல்கின்றது
மனம் எங்கோ செல்கின்றது

5 கருத்துகள்:

கணேஷ் சொன்னது…

Evergreen Melody of Ilaiyaraja. I feel happy to receive it from you. Thanks. -B.ganesh

சேக்காளி சொன்னது…

இந்த பாடலை பாடியது ஜெயசந்திரன் என நினைக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

இந்த பாடல் P.ஜெயச்சந்திரன் பாடிய பாடல் தான் .

தாஸ்

ஸ்ரீஸ்ரீ சொன்னது…

ஜேசுதாஸ் அல்ல ஜெயசந்திரன்

Bala Subramanian சொன்னது…

என்ன ஒரு அருமையான பாடல்.கதாநாயகனும் கதாநாயகியும் பாடும் பாடலை விட அந்த வெளிநாட்டு (தாய்லாந்து என நினைக்கிறேன்) இயற்கை காட்சிகளின் புகைப்பட (still) பின்னணியோடு வரும் பாடல் மனதைவிட்டு நீங்க மறுக்கிறது.இயக்குநரின் ரசனைக்கு ஒரு சபாஷ் போடலாம்.

கருத்துரையிடுக