பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 7 அக்டோபர், 2011

கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா ப்ரீத்தி என்று பேரைச் சொன்னால்

சுகமான பாடல் ஒன்று

திரைப் படம்: நெஞ்சில் ஆடும் பூ ஒன்று (1978)
இசை : இளையராஜா
குரல்கள்: S ஜானகி, S P B
பாடல்: வாலி
நடிப்பு: விஜய குமார், ராதா சலுஜாhttp://www.divshare.com/download/15865598-804

லா ஆ லலலல் லா ஆ லலல்ல லலலாலல்லலலலலல
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
ப்ரீத்தி என்று பேரைச் சொன்னால்
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
ஏதேதோ எண்ணம் வந்ததோ
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா

இந்த சுகம் சொல்ல மொழி ஏது
இன்ப ரசம் பொங்கி வரும்போது
உந்தன் வசம்தானே இளமாது

தேனில் ஊரும் பூச்செண்டு
தென்றல் கொஞ்சும் நாள் கண்டு
ஆனந்தம் தானாக என்னை தேடி வந்ததோ
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
ப்ரீத்தி என்று பேரை சொன்னால்
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
ஏதேதோ எண்ணம் வந்ததோ
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா

கன்னம் என்னும் கிண்ணம் அழகாக
கொண்டு வரும் வண்ணம் எதற்காக
ஓவியங்கள் தீட்டும் எனக்காக

கண்ணில் ரெண்டு மீன் ஆட
காதல் ஓடை நீர் ஆட
தூங்காமல் போராட
உந்தன் ஆசை வந்ததோ
லாலாலலல் லா லலல லாஆ

கங்கை நதி வந்து கடல் சேரும்
மங்கை நதி மன்னன் மடி சேரும்
மஞ்சள் நதி எங்கும் வழிந்தோடும்

நெஞ்சில் ஆடும் பூ ஒன்று
நானும் சூடும் நாள் இன்று
பாசத்தில் நேசத்தில் இந்த உள்ளம் துள்ளுதோ
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா

ப்ரீத்தி என்று பேரைச் சொன்னால்
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
ஏதேதோ எண்ணம் வந்ததோ
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
லா ஆ லலலல் லாஆ லலல்ல ல்ல்லாலல்லலல்லலல
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக