பின்பற்றுபவர்கள்

புதன், 12 அக்டோபர், 2011

கண்மணியே உன் இதய வீணையின் காண ஊஞ்சலில் ஆடினேன் மனதினில் மறைத்த மாபெரும் அன்பு

அருமையான பாடல். பாடியவர் கண்டசாலா அல்லது சங்கர் எனும் அப்போதைய புது பாடகரா என்பது தெரியவில்லை.

திரைப் படம்: மனிதன் மாறவில்லை (1962)
இயக்கம்: M G சக்கரபாணி
இசை: கண்டசாலா
நடிப்பு: ஜெமினி, ஜமுனா, சாவித்திரி
http://www.divshare.com/download/15923949-8c1

கண்மணியே உன் இதய வீணையின் காண ஊஞ்சலில் ஆடினேன்...

மனதினில் மறைத்த மாபெரும் அன்பு உன் மை விழியால் வெளியானதே...

பெண் மதி முகம் எனதாய் எண்ணினேன்...

கண்மணியே உன் இதய வீணையின் காண ஊஞ்சலில் ஆடினேன்...

பவள வாய் இதழ் பேச துடிப்பதில் பொழியுது தேன் மழை அணைக் கடந்தே...

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பவள வாய் இதழ் பேச துடிப்பதில் பொழியுது தேன் மழை அணைக் கடந்தே...

ஆனந்தமுடன் அமுதக் கடலிலே ஆழ்ந்து உலகினை மறந்தேனே...

கண்மணியே உன் இதய வீணையின் காண ஊஞ்சலில் ஆடினேன்...

திரு முகம் மலர்ந்த புன்னகை என்னை சேர்த்துக் கொண்டதாய் மகிழ்ந்தேனே...

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

திரு முகம் மலர்ந்த புன்னகை என்னை சேர்த்துக் கொண்டதாய் மகிழ்ந்தேனே...

கபட சினத்துடன் வீசிய வாள் ஜடை காதல் பாசம் என உணர்ந்தேனே...

கண்மணியே உன் இதய வீணையின் காண ஊஞ்சலில் ஆடினேன்...

மனதினில் மறைத்த மாபெரும் அன்பு உன் மை விழியால் வெளியானதே...

பெண் மதி முகம் எனதாய் எண்ணினேன்...

கண்மணியே உன் இதய வீணையின் காண ஊஞ்சலில் ஆடினேன்...

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

அசோக்ராஜ் அவர்களே ,
மிக அருமையான பாடல் .இந்த பாடலை பாடியவர் K.P.உதயபானு .இவர் ஒரு மலையாளத்தில் பல பாடல்களை பாடியுள்ளார்.இவரது குரலில் A.M.ராஜாவின் சாயல் இருக்கும்.பகிர்வுக்கு நன்றி.

அன்புடன்
தாஸ்
லண்டன்

கருத்துரையிடுக