நல்லதொரு அர்த்தமுள்ள பாடல். சமீபத்தில் தொலைக் காட்சியில் பார்க்க நேர்ந்தது. நல்லதொரு கணவனுக்கு அமைந்த முறையற்ற மனைவியை பற்றிய பாடல். நெஞ்சை நெகிழ வைத்தப் பாடல்.
திரைப் படம்: ஒரு விடுகதை ஒரு தொடர் கதை (1979)
குரல்கள்: K J Y, S ஜானகி
முசிச் : கங்கை அமரன்
ள்ய்ரிச் : வாலி
நடிப்பு: விஜயன், ஷோபா, அபர்னா
இயக்கம்: M A காஜா
http://www.divshare.com/download/15934437-3c3
நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு
நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு
நாயகி அவள் மறு புறம் அவள் வானில் இரண்டு நிலவு
நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு
பூஜைக்கொரு புஷ்பம் வந்தது
புனிதம் என்று பேரை சொன்னது
தெய்வமதை சூடி கொண்டது
மாலையென தோளில் கொண்டது
பூவிலுள்ள தேனை கண்டு ஒரு
சோலை வண்டு அதை திருடி சென்றது
தலைவன் ஒரு கோவிலில்
அவன் தெவியோ தெரு வாசலில்
நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு
நாயகி அவள் மறு புறம் அவள் வானில் இரண்டு நிலவு
மானிடத்தில் மோகம் வந்தது
சீதைக்கு அதில் சோகம் வந்தது
யாரை இதில் குற்றம் சொல்வது
விதியின் வழி வாழ்க்கை செல்வது
போட்டு வைத்த கோடு தாண்டி
தன் வீடு தாண்டி அன்னப்பேடு சென்றது
மணக்கும் வரை பூக்கடை
மணம் மாறினால் அது சாக்கடை
நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு
நாயகி அவள் மறு புறம் அவள் வானில் இரண்டு நிலவு
நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு
1 கருத்து:
நல்ல பாடல் இதே படத்தில் வரும் விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று என்கிற பாடலும் அருமையான பாடல். முடிந்தால் அதையும் தரவும்.தேடிக்கொண்டே இருக்கிறேன்
கருத்துரையிடுக