பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

மலரே நலமா மடிமேல் விழவா விரியும் இதழ்வசம் வழியும் மதுரசம்


ஆர்ப்பாட்டம் இல்லாத பின்னனி இசையில் கொஞ்சம் அழுத்தமான பாடல் வரிகளை மிக எளிதாக பாடியிருக்கிறார்கள் கை தேர்ந்த பாடகர்கள்.

திரைப் படம்: உரிமை (1985)
இயக்கம்: ராம நாராயணன்
நடிப்பு: சுரேஷ், நளினி
இசை: இளையராஜா
குரல்கள்: K J யேஸுதாஸ், S ஜானகிமலரே நலமா மடிமேல் விழவா
விரியும் இதழ்வசம் வழியும் மதுரசம்
அரச இலையில் உரசும் நிலையில்
சரசம் எத்தனையோ
இதழ் அமுத சுரபி வழிய வழிய
வழங்கும் முத்திரையோ
மலரே நலமா..மலரே

தென்பாண்டி முத்துக்கள் முப்பது
சிப்பியில் வைப்பது இதழ்
அம்மாடி எத்தனை முத்திரை
நித்தமும் வைப்பது அதில்
கோடி கொடுத்திட வேணுமடி
ஆடி இளைத்தது வஞ்சிக்கொடி
ஆடை இரவினிலே கலைந்தது
ஆசை இடையினிலே அலைந்தது
போதை மனதினிலே எழுந்தது
பூவை விழி அதிலே சிவந்தது
சிவந்த கண்ணில் காதல் தீப ஒளியிலே கலைவிழா
மலரே நலமா..மலரே

வெண்மேகம் பந்தலை இட்டது
முத்துக்கள் கொட்டுது அதோ
பெண்தேகம் பஞ்சணை இட்டது
நெஞ்சினை தொட்டது இதோ
சிந்தும் மழையினில் நீ குளிக்க
சேலை குடையினை நீ பிடிக்க
சொர்க கதவுகளோ திறந்தன
சோதி கருவிழிகள் சிவந்தன
காதல் கனவுகளோ பலித்தன
கன்னக் கனிச்சுளைகள் இனித்தன
நயன பாஷை பேசி பேசி
இளமைகள் இணைந்தன

மலரே நலமா மடிமேல் விழவா
விரியும் இதழ்வசம் வழியும் மதுரசம்
அரச இலையில் உரசும் நிலையில்
சரசம் எத்தனையோ
இதழ் அமுத சுரபி வழிய வழிய
வழங்கும் முத்திரையோ
மலரே நலமா..மலரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக