பின்பற்றுபவர்கள்

புதன், 26 அக்டோபர், 2011

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை

நல்ல குரல் வளம், இசை வளம், கவிதை வளம் கொண்ட வேகமான இனிமையானப் பாடல்.

திரைப் படம்: தெய்வத் தாய் (1964)
பாட : வாலி
பாடும் குரல்: T M S
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
இயக்கம்: P மாதவன்
நடிப்பு: எம் ஜி ஆர், சரோஜா தேவி



http://www.divshare.com/download/16034313-90a

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை
அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை

ல ல லல்ல லா ல ல லல்ல
ல ல ல லல்ல ல ல ல ல

கொடி மின்னல் போலொரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தேன்
குயிலோசை போலொரு வார்த்தை
குழலோ யாழோ  என்றிருந்தேன்
கொடி மின்னல் போலொரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தேன்
குயிலோசை போலொரு வார்த்தை
குழலோ யாழோ  என்றிருந்தேன்

நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தாள்
தீயோடு பஞ்சை சேர்த்தாள்
நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தாள்
தீயோடு பஞ்சை சேர்த்தாள்

இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை
ல ல லல்ல லா ல ல லல்ல

கலை அன்னம் போலவள் தோற்றம்
இடையில் இடையோ  கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம்
இதழிலில் மதுவோ குறையாது
கலை அன்னம் போலவள் தோற்றம்
இடையில் இடையோ  கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம்
இதழிலில் மதுவோ குறையாது

என்னோடு தன்னை சேர்த்தாள்
தன்னோடு என்னை சேர்த்தாள்
என்னோடு தன்னை சேர்த்தாள்
தன்னோடு என்னை சேர்த்தாள்

இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை

ல ல லல்ல லா ல ல லல்ல
ல ல ல லல்ல ல ல ல ல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக