பின்பற்றுபவர்கள்

சனி, 22 அக்டோபர், 2011

செல்லக் கிளியே மெல்ல பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே


திரு தாஸ் அவர்களின் விருப்பத்தில் இந்தப் பாடல். இனிமையான குரலில் மனதை இதமாக்கும் பாடல். திரு T M S உம் திருமதி P சுசீலாவும் தனித் தனியாக இப்பாடலை பாடி அவரவர் திறமையை காட்டி இருக்கிறார்கள். தாலாட்டு பாடலிலேயே தங்களது சோகத்தையும் இணைத்திருகிறார்கள்.

திரைப் படம்: பெற்றால் தான் பிள்ளையா (1966)
இசை: M S விஸ்வனாதன்
பாடியவர்:P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: பஞ்சு அருணாசலம்
நடிப்பு: எம் ஜி ஆர், சரோஜா தேவி

 

http://www.divshare.com/download/15998734-8a9

செல்லக் கிளியே மெல்ல பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
செல்லக் கிளியே மெல்ல பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே
செல்லக் கிளியே மெல்ல பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு

நெஞ்சில் குடியிருக்க நித்தம் கொலுவிருக்க
கெஞ்சும் குமரிப் பெண்ணின் வாசல் வருவான்
கண்ணில் கொடி வளர்த்து காதல் மலர் பறித்து
பெண்ணில் குழல் முடிக்க வள்ளல் தருவான்

செல்லக் கிளியே மெல்ல பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு

ஊரார் பலர் இருந்தும் உற்றார் சிலர் இருந்தும்
வேறோர் இடத்தில் என்னை தரவில்லையே
உன்னை நினைவில் வைத்து நினைவை மனதில் வைத்து
மனதை கொடுத்தும் சுகம் பெறவில்லையே
செல்லக் கிளியே மெல்ல பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
ஆறீறாறோ ஆறீறாறோ ஆறீறாறோ ஆறீறாறோ

பாடியவர்:T M Shttp://www.divshare.com/download/15998614-b4f

ஆறீறோ ஆறீறோ ஆறீறோ ஆறீறோ ஆறீறோ ஆறீறோ
செல்லக் கிளியே மெல்ல பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
செல்லக் கிளியே மெல்ல பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு

தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே

செல்லக் கிளியே மெல்ல பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
ஆறீறோ ஆறீறோ ஆறீறோ ஆறீறோ ஆறீறோ ஆறீறோ

திங்கள் முகமெடுத்து செவ்வாய் இதழெடுத்து
வெள்ளை மலர்ச் சிரிப்பில் பிள்ளை வருவான்
திங்கள் முகமெடுத்து செவ்வாய் இதழெடுத்து
வெள்ளை மலர்ச் சிரிப்பில் பிள்ளை வருவான்
தத்தும் நடை நடக்க தண்டை குரல் கொடுக்க
சித்தம் குளிர வைக்க முத்தம் தருவான்
செல்லக் கிளியே மெல்ல பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
ஆறீறோ ஆறீறோ ஆறீறோ ஆறீறோ ஆறீறோ ஆறீறோ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக