பின்பற்றுபவர்கள்

வியாழன், 3 நவம்பர், 2011

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே


திரு தாஸ் அவர்களின் மற்றுமொரு விருப்பப் பாடல். எப்போது கேட்டாலும் எனது மனதை என்னவோ செய்யும் பாடல் இது. பெண்களின் தியாகத்தில் ஒர் அங்கமாகத்தான் இதை நினைக்கத் தோன்றுகிறது.
திருமதி சுசீலா அவர்களின் குரல் வசீகரமே தனிதான். இத்துடன் இதே பாடல் சோகமாக ஒலிப்பதும் இணைத்திருக்கிறேன் கண்ணொளியாக.

திரைப் படம்: சித்தி (1966)
இசை: K V மகாதேவன்
நடிப்பு: முத்துராமன், பத்மினி
இயக்கம்: K S கோபாலகிருஷ்ணன்
பாடல்: கண்ணதாசன்



http://www.divshare.com/download/16068703-d84












பெண்ணாக பிறந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம் இறப்பில் மறு தூக்கம்
இப்போது விட்டு விட்டால் எப்போதும் தூக்கம் இல்லை
என்னறிய கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே
நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளுத் தமிழ் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
ஈரெழு மொழிகளுடன் போராட சொல்லுமடி
தீராத தொல்லையடி
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே

மாறும் கன்னி மனம் மாறும்
கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும் போது தூக்கம் என்பதேது
தான் நினைத்த காதலனை சேர வரும் போது
தான் நினைத்த காதலனை சேர வரும் போது
தந்தை அதை மறுத்துவிட்டால் கண்ணுறக்கம் ஏது
கண்ணுறக்கம் ஏது
மாலையிட்ட தலைவன் வந்து சேலை தொடும் போது
மங்கையரின் தேன் நிலவில் கண்ணுறக்கம் ஏது
கண்ணுறக்கம் ஏது
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே

இய்யிரண்டு திங்களிலும் பிள்ளை பெறும் போதும்
அன்னை என்று வந்த பின்னும் கண்ணுறக்கம் போகும்
கண்ணுறக்கம் போகும்
கை நடுங்கி கண் மறைந்து காலம் வந்து தேடும்
கை நடுங்கி கண் மறைந்து காலம் வந்து தேடும்
காணாத தூக்கமெல்லாம் தானாக சேரும்
தானாக சேரும்
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே
ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

திரு அசோக்ராஜ் அவர்களே
வணக்கம் .நல்ல பாடலுக்கு நன்றி.
இந்த பாடலை இசையமைத்தவர் "மெல்லிசை மாமன்னர்" எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.

அன்புடன்
தாஸ்

கருத்துரையிடுக