இனிமை இசையும், கவிதையில் அழகாக பெண்ணை வர்ணித்துள்ள கவிஞரும் பாடிய T M S அவர்களும் பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளனர். அழகான பாடல்.
திரைப் படம்: தாயைக்காத்த தனயன் (1962)
இசை: K V மஹாதேவன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
இயக்கம்: M A திருமுகம்
http://www.divshare.com/download/16178345-4b3
http://www.divshare.com/download/16178472-77a
கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா
கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா
தொட்டு தொட்டு நின்றன கைகள்
சுட்டு சுட்டு கொன்றன கண்கள்
தொட்டு தொட்டு நின்றன கைகள்
சுட்டு சுட்டு கொன்றன கண்கள்
நான் கிட்ட கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டி சென்றது வண்டு
கிட்ட கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டி சென்றது வண்டு
கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா
தங்கரதம் போல வருகிறாள்
அல்லி தண்டுகள் போலே வளைகிறாள்
தங்கரதம் போல வருகிறாள்
அல்லி தண்டுகள் போலே வளைகிறாள்
குங்குமப் பூப்போல் சிரிக்கிறாள்
இன்பக்கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்
குங்குமப் பூப்போல் சிரிக்கிறாள்
இன்பக்கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்
காலையில் மலரும் தாமரைப்பூ
அந்தி கருக்கலில் மலரும் மல்லிகைப்பூ
காலையில் மலரும் தாமரைப்பூ
அந்தி கருக்கலில் மலரும் மல்லிகைப்பூ
இரவில் மலரும் அல்லிப்பூ
அவள் என்றும் மணக்கும் முல்லைப்பூ
இரவில் மலரும் அல்லிப்பூ
அவள் என்றும் மணக்கும் முல்லைப்பூ
கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா
1 கருத்து:
ஆடியோவுடன் வீடியோவைப் பார்த்து ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்! அதைத் தரும் மனம் யாருக்கு இங்கே வரும் வரும் வரும்! நன்றி!
கருத்துரையிடுக