பின்பற்றுபவர்கள்

சனி, 19 நவம்பர், 2011

விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம் வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்


இது திரு தாஸ் அவர்களின் விருப்பமான பாடல். அவருக்கு மட்டுமில்லை நமக்கும் பிடித்த பாடல்தான். என்னவொரு தங்கு தடங்கல் இல்லாத ஓட்டம் பாட்டில்? நல்லதொரு பாடலுக்கு இது உதாரணம். மென்மையான பின்னனி இசையுடன் இனிமை குரல்களால் பாடல் முழுமை பெற்றுள்ளது.

திரைப் படம்: நாணல் (1965)
பாடியவர்கள்: T M S, P சுசீலா
இசை: வி.குமார்
நடிப்பு: முத்துராமன், K R விஜயா
இயக்கம்: K பாலசந்தர்



http://www.divshare.com/download/16211248-e8f

விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்
கனவுக்கு மேலாடை தொடர்ந்து வரும் தூக்கம்
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்

மண்ணுக்கு மேலாடை
ம் ம் ம் ..மண்ணுக்கு மேலாடை ரா ரா ரா
மண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழலாகும்
ஹையே
மண்ணுக்கு மேலாடை வண்ண மயில் இருட்டு
மனதிற்கு மேலாடை
வளர்ந்து வரும் நினைவு

பத்துக்கு மேலாடை
பத்துக்கு மேலாடை..ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஹா
ஆ ஆ ஆ ஆ
நிறுத்து..ராகம் பாடாதே..பதிலைச் சொல்லு
பத்துக்கு மேலாடை
தெரியலையா? ம் சொல்லட்டுமா?
பத்துக்கு மேலாடை பதினொன்றேயாகும்
பக்கத்தில் நீ இருந்தால் பல கதை உருவாகும்

விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்

காலத்தின் அடையாளம் பருவங்களேயாகும்
காதலர்கள் நடத்துவது கண் சேர்தல் ஆகும்
காதலர்கள் நடத்துவது கண் சேர்தல் ஆகும்
இது வரையில் புது உலகம் நாம் கண்டதுமில்லை
எது வரையில் சென்றாலும் எல்லை இதற்கில்லை

விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

எனது வலைப்பூவில் இணைந்தமைக்கு மிக்க நன்றி ...

பெயரில்லா சொன்னது…

இந்தபாடலை எழுதியவர் சுரதா .


தாஸ்

கருத்துரையிடுக