பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 15 நவம்பர், 2011

நான் அன்றி யார் வருவார் அன்பே நான் அன்றி யார் வருவார்


நான் கேள்வி பட்டது இந்த பாடல் எம் ஜி யாருக்காக மகாதேவி படத்திற்காக எழுதியது. ஆனால் அவர் இன்னும் கொஞ்சம் வேகமான பாடலாக கேட்டதால் இதை மாற்றி ''கண் மூடும் வேளையிலும் கலை என்ன'' என்ற பாடலை எழுதி கொடுத்தாராம். பின்னர் கண்ணதாசன் தன் சொந்த படத்தில் இந்தப் பாடலை உபயோகப் படுத்திக் கொண்டாராம்.
T R மாகாலிங்கம் அவர்கள் கீழ் ஸ்தாயில் பாடிய ஒரே பாடல் இதுவாகத்தான் இருக்கும்.

திரைப் படம்: மாலையிட்ட மங்கை (1958)
இசை: M S விஸ்வனாதன் T K ராமமுர்த்தி
குரல்கள்: A P கோமலா, T R மகாலிங்கம்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: T R மகாலிங்கம், பண்டரி பாய்
இயக்கம்: G R நாதன்


Upload Music Files - Share Audio - NaanAndri Yaar arivaar





நான் அன்றி யார் வருவார் அன்பே
நான் அன்றி யார் வருவார்
இள நங்கை உன்னை வேறு யார் தொடுவார்
நான் அன்றி யார் வருவார் அன்பே
நான் அன்றி யார் வருவார்

ஏன் இல்லை ஏன் இல்லை இன்றொருவர் அருகில் வந்தார்
ஏன் இல்லை இன்றொருவர் அருகில் வந்தார்
முத்தம் எனக்கே என்றார் சொன்னார் தந்தார்
பேசாமல் பேசுகின்றார் வண்ணம் பாடாமல் பாடுகின்றார்

வண்ண பாவை உந்தன் இதழ் கோவை தன்னில்
இந்த காயம் என்ன வந்த மாயம் என்ன
வண்ண பாவை உந்தன் இதழ் கோவை தன்னில்
இந்த காயம் என்ன வந்த மாயம் என்ன

கூண்டு கிளி எடுத்து கொஞ்சினேன்

இதழ் கோவை என நினைத்து கொண்டதோ

கூண்டு கிளி எடுத்து கொஞ்சினேன்

இதழ் கோவை என நினைத்து கொண்டதோ
முத்தம் தந்ததோ சொந்தம் கொண்டதோ

இன்னும் சந்தேகமா

கண்ணே....

கண்ணா....
மாதென்னை யார் தொடுவார்
எந்தன் மன்னன் உமை அன்றி யார் வருவார்
மாதென்னை யார் தொடுவார்

கன்னி மாலை கண்டும் இன்ப சோலை வந்தும்
இன்னும் கோபம் என்ன மின்னும் நானம் என்ன

நான தடை பிறந்த உள்ளமே
அதில் ஆசை மடை கடந்த வெள்ளமே
இந்த நெஞ்சமே எந்தன் சொந்தமே
இன்பம் பண் பாடுவோம்

கண்ணே...

கண்ணா...
நாம் அன்றி யார் அறிவார் அன்பே
நாம் அன்றி யார் அறிவார்
இன்ப நலம் நாடும் மன இன்பம் யார் பெறுவார்...
நாம் அன்றி யார் அறிவார்

2 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

டி.ஆர்.மகாலிங்கம் ஹைபிட்சில் பாடாத பாடல் இதுவாகத்தான் இருக்கும் என நீங்கள் சொல்லியிருப்பது மிகச்சரி. ஏ.எம்.ராஜா போல அழகாகப் பாடியிருக்கிறார். வீடியோவுடன் கேட்கத் தந்தமைக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்...

ஓசூர் ராஜன் சொன்னது…

காலம் கடந்த செய்திகளையும் சொல்லுவதால்... இனி நீங்கள் கடல் தவளையாக ஆகும்படி சபிக்கிறேன்!

கருத்துரையிடுக