பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 27 நவம்பர், 2011

இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஊறும் மடி மீது தலை வைத்து


இனிமையோ இனிமை. இசை, பாடல் வரிகள், குரல்கள் எல்லாமே. இசையமைப்பாளருக்கு இது முதல் திரைப் பாடல் என்பதாகவே தெரியவில்லை. பின்னர் இவர் காணாமல் போனார் என்பது சோகமே.

திரைப் படம்: மண்ணுக்குள் வைரம் (1986)
இசை: தேவேந்திரன்
குரல்கள்: S P B, S ஜானகி
நடிப்பு: ரஞ்சனி, முரளி
இயக்கம்: மனோஜ் குமார்

http://www.divshare.com/download/16267401-753
இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்
இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்
மடி மீது தலை வைத்து
மடி மீது தலை வைத்து
கண்ணே உன்னோடு நான் கதை சொல்ல வேண்டும்

இதழோடு...
இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்

என் பேரை மறந்து நான் இருந்தேன்
நீ எந்தன் நினைவாக வந்தாய்
ஏன் உன்னை பிரிந்து நான் பறந்தேன்
உன் கண்ணில் உயிர் தேடி வந்தேன்
கச்சேரி கேளாத இசையுண்டு மானே
நாம் சிந்தும் முத்தங்கள் சங்கீதம் தானே
என் மேனி உன் மார்பில் தானே
என் மேனி உன் மார்பில் தானே
இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்

சில நாளாய் துடித்தன விழிகள்
ஏனென்று கேளுங்கள் நீங்கள்
கண் தூக்கம் மறந்தன இமைகள்
நீயின்றி நகராது நாட்கள்
கண்ணா உன் உயிரோடு உயிராகிப் போனேன்
பினி தீர்க்க நான் வந்து நோயாகிப் போனேன்
நான் உந்தன் மருந்தாக ஆனேன்
நான் உந்தன் மருந்தாக ஆனேன்

இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்
மடி மீது தலை வைத்து
கண்ணே உன்னோடு நான் கதை சொல்ல வேண்டும்

இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக