பின்பற்றுபவர்கள்

திங்கள், 14 நவம்பர், 2011

ஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா இனி மாதம் பனிரெண்டுமே


S P B கலக்கியிருக்கும் மற்றொரு பாடல். இடையிடையே ஏதோ படக் காட்சிக்காக வரும் இசைத் தவிர மற்றபடி மென்மையான பின்னனி இசைக் கொண்ட அழகான பாடல்.

திரைப் படம்:  மதுமதி (1993)
பாடல்: காளிதாசன்
இசை : தேவா
இயக்கம்: அகத்தியன்
நடிப்பு: ப்ரசன்னா, மதுமிதாhttp://www.divshare.com/download/15777645-312
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ
ஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா
ஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா

இனி மாதம் பனிரெண்டுமே
மலர் காலம் தொடர்ந்திடுமே
இளம் காதல் சபையினிலே
புது வேதம் மலர்ந்திடுமே
மதுபாலா......ஆ...ஆ...ஆ  ஆ
தாயாக மாறவா.. தாலாட்டு பாடவா..

ஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா

ஊரெங்குமே ஓர் வெண்ணிலா நீதானே தேவி
ஏழை மகன் என் வீட்டில் நீ செந்தூர ஜோதி
இளமை காலங்கள் ஒளி வீசும்
இன்ப வசந்தங்கள் நாமல்லவா
எளிமை கோலத்தில் இருந்தாலும்
உந்தன் இதயம் நானல்லவா
மதுபாலா.. என் மதுபாலா
உன்னை மனதுக்குள் வரைந்தேன் வெகு நாளா

ஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா

ஸ்ரீராமனின் சீதை மனம் பூ பூக்கும் நேரம்
ஊடல்களில் மாதங்களும் நாளாக மாறும்
திசைகள் எல்லாமே தடுமாறும்
இந்த திருமகள் பாதம் பட்டால்
உதயம் சொல்லாமல் இடம் மாறும்
உந்தன் விழி மலர் ஜாடை கண்டால்
மதுபாலா.. என் மதுபாலா
உன்னை மனதுக்குள் வரைந்தேன் வெகு நாளா

ஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா
ஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா

இனி மாதம் பனிரெண்டுமே
மலர் காலம் தொடர்ந்திடுமே
இளம் காதல் சபையினிலே
புது வேதம் மலர்ந்திடுமே
மதுபாலா......ஆ...ஆ...ஆ  ஆ

ஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக