பின்பற்றுபவர்கள்

சனி, 5 நவம்பர், 2011

உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான்

தேவா இசையில் குறிப்பிட்ட சில பாடல்களில் இதுவும் ஒரு சிறந்த பாடல். அழகான குரல்களில் சிறப்பான பின்னனி இசையில் மென்மையானப் பாடல். இனிமையான பெண் குரல்.

திரைப் படம்: மின்சாரக் கன்னா (1999)
குரல்கள்: ஹரிஹரன், சுஜாதா மோகன் or ஹரிணி
இசை: தேவா
இயக்கம்:  K S ரவிக் குமார்
நடிப்பு: விஜய், ரம்பா
பாடல்: வாலிhttp://www.divshare.com/download/16105813-3e2


உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்

உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன் மேல் ஆசைதான்

உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன் மேல் ஆசைதான்

உன் தோள் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உறைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்

உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன் மேல் ஆசைதான்
ல ல ல ல ல ல ல ல ல ல்

கண்ணில் கடைக் கண்ணில் நீயும் பார்த்தால் போதுமே
கால்கள் எந்தன் கால்கள் காதல் கோலம் போடுமே
நானம் கொண்டு மேகம் ஒன்று மறையும் நிலவென
கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென்ன
தூக்கத்தில் உன் பேரை நான் சொல்ல காரணம் காதல் தானே

ப்ரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான்
உன்னை படைத்ததாலே

உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன் மேல் ஆசைதான்

நீயும் என்னை பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால் மறு பிறவி தொடருமே
நீயும் கோவில் ஆனால் சிலையின் வடிவில் வருகிறேன்
நீயும் தீபம் ஆனால் ஒளியும் நானே ஆகிறேன்
வானின்றி வெண்ணிலா இங்கில்லை
நாம் இன்றி காதல் இல்லையே
காலம் கரைந்த பின்னும் கூந்தல் நரைத்த பின்னும்
அன்பில் மாற்றம் இல்லையே...

உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன் மேல் ஆசைதான்
உன் தோள் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உறைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்
ஆசைதான் உன் மேல் ஆசைதான்
ஆசைதான் உன் மேல் ஆசைதான்

2 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

எனக்கும் பிடித்த பாடல். தேனிசை தென்றல் தேவாவின் இசையில் ஹரிஹரன் குரலில் பல அற்புதமான பாடல்கள் மலர்ந்துள்ளது.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமையான பாடல்....!!!

கருத்துரையிடுக