பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 1 நவம்பர், 2011

எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ அங்கெல்லாம் என் ஆசை பறக்கின்றது

நல்ல இனிமையானப் பாடல் V குமார் அவர்கள் இசையில். மென்மையாக அனுபவித்துப் பாடியிருக்கிறார் T M S அவர்கள்.

திரைப் படம்: வெகுளிப் பெண் (1971)
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: S S தேவதாஸ்
நடிப்பு: ஜெமினி, தேவிகா, முத்துராமன்



http://www.divshare.com/download/16083171-165




எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ
அங்கெல்லாம் என் ஆசை பறக்கின்றது

எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ
அங்கெல்லாம் என் ஆசை பறக்கின்றது

என்னை தொட்ட எண்ணங்கள் மின்னலிட்ட கன்னங்கள்
என்னென்று நான் சொல்வதோ

எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ
அங்கெல்லாம் என் ஆசை பறக்கின்றது

சுகமான இசை பாடும் இள மங்கை யாரோ
பதமாக நடமாடும் அவள் வண்ண தேரோ
சுகமான இசை பாடும் இள மங்கை யாரோ
பதமாக நடமாடும் அவள் வண்ண தேரோ
வானத்திலிருந்து தேவதை இறங்கி
வானத்திலிருந்து தேவதை இறங்கி
வந்து நின்றாளோ வளயல்கள் குலுங்கி

என்னை தொட்ட எண்ணங்கள் மின்னலிட்ட கன்னங்கள்
என்னென்று நான் சொல்வதோ

எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ
அங்கெல்லாம் என் ஆசை பறக்கின்றது

லா லா லா லா ல லா லலலா

கரை போட முடியாத புது வெள்ளை ஆடை
கலை மானும் அறியாத விழி வண்ண ஜாடை
கரை போட முடியாத புது வெள்ளை ஆடை
கலை மானும் அறியாத விழி வண்ண ஜாடை
பார்வையில் இளமை வார்த்தையில் மழலை
பார்வையில் இளமை வார்த்தையில் மழலை
கூந்தலும் வணங்கும் காலடி நிழலை

என்னை தொட்ட எண்ணங்கள் மின்னலிட்ட கன்னங்கள்
என்னென்று நான் சொல்வதோ
எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ
அங்கெல்லாம் என் ஆசை பறக்கின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக