பின்பற்றுபவர்கள்

சனி, 26 நவம்பர், 2011

முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம் கன்னி பெண்னை சுற்றுவதேன் காதலராட்டம்


திரு கோவை ரவி அவர்களின் விருப்பப் பாடல். இனிமையான கலாட்டா பாடல். இனிய குரல்களில் ஒலிக்கிறது.

திரைப் படம்: ஒரு கோவில் இரு தீபங்கள் (1979)
நடிப்பு: விஜய், சரோஜா (யாரோ புதியவர்கள்)
இசை: M தக்ஷினாமூர்த்தி.
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: S P முத்துராமன்



http://www.divshare.com/download/14201702-7a3



உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்
கன்னி பெண்னை சுற்றுவதேன் காதலராட்டம்
பாடம் கற்றுதரும் முன்னே நீ எடுத்திடு ஓட்டம்
முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்
உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்

கையால் தொட்டாலே
கன்னம் புண்ணாகும்
ஆசை என்னாகும்
அச்சம் உண்டாகும்
ஆடல் இன்பம்
தேடவில்லை
ஆனந்தமே
தேவை இல்லை
செவ்விதழ் மலரட்டுமே
தேன் மழை பொழியட்டுமே
பொன்னுடல் சாய்ந்தாலென்ன
புதிய சுகம் கண்டாலென்ன
கல்லூரி படிப்பில் சீரோ
காதல் நடிப்பில் ஹீரோ
கற்பனை ஒண்ணா ரெண்டா
கனவெல்லாமே நடப்பதுண்டா
முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்
உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்


பருவம் வந்தாலே
பார்த்து பழகனும்
பழக வந்தாலே
பாசம் மலரனும்
தேன் மதுவோ
போதை தரும்
மான் விழியோ
மையல் தரும்
ஊடல் இரவு வரை
கூடல் விடியும் வரை
இரவே வந்தால் இன்பம் பொங்கும் அறை பள்ளியறை
நானும் படித்தவள்தான்
நாலும் தெரிந்தவள்தான்
அச்சத்தால் ஆசைகளை
அடக்கி வாழும் பெண்மகள்தான்

முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்
உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்
கன்னி என்னை கை பிடித்தாய் காதலனாட்டம்
பாடம் கற்று கொள்ளும் ஆட்டம்தானே காதல் கொண்டாட்டம்
லா ல ல ல லா ல ல  ல ல ல
ல ல ல ல ல ல ல ல ல ல

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

மிக்க நன்றி சார். இன்று தான் மின்னஞ்சல் பார்த்தேன் அதனால் உடனே நன்றி கடிதம். உங்களூ அன்புக்கும் ஆதரவுக்கும் சேர்த்து மீண்டும் நன்றி. உங்கள் பதிவுகள் அனைத்தும் எனக்கு கிடைக்கின்றன உங்களின் உழைப்புக்கு வந்தனம்.

கருத்துரையிடுக