பின்பற்றுபவர்கள்

புதன், 16 நவம்பர், 2011

அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி கந்தன் வர காணேனே


சுத்தமான தமிழ் உச்சரிப்புடன் அழகான தமிழ் கவிதையில் 'அவரைத்' தேடும் இவர். இது திரு தாஸ் மற்றும் என்னுடைய விருப்பமானப் பாடல்.

திரைப் படம்: பார்த்திபன் கனவு (1960)
இசை: S வேதா
குரல்: M L வசந்தகுமாரி
இயக்கம்: D யோகானந்த்
நடிப்பு: ஜெமினி, ராகினி
பாடல்: விந்தன்


http://www.divshare.com/download/16187891-762




அந்தி மயங்குதடி
ஆசை பெருகுதடி
அந்தி மயங்குதடி
ஆசை பெருகுதடி
கந்தன் வர காணேனே
மயிலே..
அந்தி மயங்குதடி
ஆசை பெருகுதடி
கந்தன் வர காணேனே

வண்ண மயிலே வண்ண மயிலே
வண்ண மயிலே வண்ண மயிலே

ஏக்கத்தால் படிந்த விட்ட
தூக்கமில்லா துன்பத்தை
ஏக்கத்தால் படிந்த விட்ட
தூக்கமில்லா துன்பத்தை
ஒத்தி எடுத்திடவே..
மயிலே
ஒத்தி எடுத்திடவே
உதடவரை தேடுதடி
அந்தி மயங்குதடி
ஆசை பெருகுதடி
கந்தன் வர காணேனே

வண்ண மயிலே வண்ண மயிலே
வண்ண மயிலே வண்ண மயிலே

தாகத்தால் நா வறண்டால்
தண்ணீரால் தணியுமடி
தாகத்தால் நா வறண்டால்
தண்ணீரால் தணியுமடி
இதயம் வறண்டுவிட்டால்
எதைக் கொண்டு தணிப்பதடி
இதயம் வறண்டுவிட்டால்
எதை கொண்டு தணிப்பதடி
கள்ள சிரிப்பாலே
கன்னத்தை கிள்ளிவிட்டு
கள்ள சிரிப்பாலே
கன்னத்தை கிள்ளிவிட்டு
அள்ளி அணைத்திடவே..
மயிலே
அள்ளி அணைத்திடவே
அவர் வரக் காணேனடி
அந்தி மயங்குதடி
ஆசை பெருகுதடி
கந்தன் வர காணேனே

வண்ண மயிலே வண்ண மயிலே
வண்ண மயிலே வண்ண மயிலே

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

திரு அசோக் ராஜ் அவர்களே

வணக்கம்.

எம்.எல்..வசந்தகுமாரி பாடிய இந்த பாடல் அமைந்தராகம் கல்யாணி.இசையமைப்பாளர் வேதா ஓர் சிறந்த இசையமைப்பாளர் எனபதற்கு அவர் அமைத்த பல பாடல்களை உதாரணம் காட்டலாம். குறிப்பாக சித்த்ராங்கி ,பார்த்திபன் கனவு பட பாடல்களை குறிப்பிடலாம்.
அவரை ஒரு" கொப்பி " இசையமைப்பாளர் என்று பலரும் இழிவுபடுத்திவருகின்றனர்.உண்மை அதுவல்ல. என்பர்தர்க்கு பார்த்திபன் கனவு பட பாடல்கள் சிறந்த எடுத்துக்காட்டு.
துரதிஸ்டவசமாக மார்டன் தியேட்டர்ஸ் படங்களில் ஹிந்தி பாடல்களை தழுவி அமைத்திருப்பார்.அவை எல்லாம் தயாரிப்பாளரின் கேடுபிடிக்குல்லாநதாலேயே நிச்சயமாக நிகழ்ந்திருக்கும் என எண்ண இடமிருக்கிறது.அதுமட்டுமல்ல பின்னணி இசையிலும் மேற்க்கத்திய இசையை கலந்து கொடுக்கும் விதமும் அருமையாக இருக்கும்.ஸ்பானிய இசையை முன் மாதிரியாக கொண்டு இசையமைத்திருப்பார்.

இன்று பகிரங்கமாக மேற்கத்தேய இசையை திருடி தங்களை மேதாவிகளாக காட்டும் போலிகளுக்கு பேரும் புகழும்
கிடைப்பதும் அங்கீகாரம் வழங்குவதும் நல்ல இசையமைப்பாளர்களை எல்லாம் அவமதிப்பது போன்றதாகும்.



அன்புடன்
தாஸ்

கருத்துரையிடுக