பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 26 ஜூலை, 2013

பட்டத்து யாணை

பட்டத்து யாணை

சந்தானம் கதாநாயகனாகவும் வில்லன்கள் காமெடி நடிகர்களாகவும் வரும் பட்டத்து யாணை கலகலப்புக்கு பஞ்சமில்லாத படம். இன்றைய தமிழ் பட இலக்கணப் படி இண்ட்ரோடெக்ஷன் பாடலோடு விஷால் வருவதால் அவரையும் ஹீரோவாகவே பார்க்க வேண்டியுள்ளது. வழக்கம் போல அவர் மட்டுமே வில்லன்களை துவம்சம் செய்கிறார். பாய்ந்து பாய்ந்து பிதுக்குகிறார் வில்லன்களை. (என்றைக்கு ஒழியுமோ இந்த வதை நமக்கு?) இது காமெடி படமா சீரியஸ் என்பது கடைசி வரை புரியவில்லை. காமெடி படம் என்றால் பல இடங்களில் லாஜிக் பார்க்கவேண்டாம். கதாநாயகி என்று சொல்லப் படும் நடிகர் அர்ஜுன் மகள் ஐஷ்வரியா வராத காட்சிகள் மட்டுமே நன்றாக உள்ளது. ஒரு காட்சியில் அவர் விஷால் கையை பிடித்துக் கொண்டு திருச்சி நகரத் தெருக்களில் அழைத்து போகும் போது ஆயாவும் அவரது பேரன் விஷாலும் போவது போல தெரிவது தவிர்க்க முடியவில்லை. அவரை விட அந்தப் படத்தில் சந்தானத்தின் பாட்டியாக வருபவர் கொஞ்சம் இளமையாக இருப்பது போலத் தெரிகிறது. இடைவெளி விடாத அரபு நாட்டு திரையரங்கங்களில் அவ்வப்போது பாத்ரூம் போய்வர வசதியாக இடையிடையே பாடல் காட்சிகள் நம் டென்சனை குறைக்கின்றன. இசையமைப்பாளர்கள் தமன் மற்றும் சபேஸன் முரளிக்கு நன்றி. (பட்டத்து யாணை என்ற படத்தின் டைட்டிலுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தயாரிப்பாளர் மைகேல் ராயப்பன் அவர்களை (இவர் சமீபத்தில்தான் தே மு தி க விலிருந்து அ தி மு க வந்தார்) கேட்ட போது அப்படியா சம்பந்தமே தெரியவில்லையா. பட்டத்து யாணை 2 என்று படம் எடுத்து அதில் சம்பத்தப் படுத்திவிட்டால் போகிறது. என்னை வாழவைக்கும் தமிழ் நெஞ்சங்கள் என்ன அதை பார்க்கமாட்டேன் என்றா சொல்லிவிடப் போகிறார்கள் என்று கூலாக சொன்னார்) ஆக சந்தானம் இல்லையென்றால் இனி தமிழ் படங்கள் விளங்காது என்பது இந்த படத்திலும் நம் தமிழ்ப் படத்தயாரிப்பாளர்கள் மீண்டும் ஒரு முறை விளக்கிவிட்டார்கள். நாம்தான் புரிந்துக் கொள்ளவில்லை. சந்தானம் இல்லாத மற்ற பகுதிகளை நீக்கிவிட்டு படம் பார்த்தால் படம் பிரமாதம்.

https://www.facebook.com/asoktamil


1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பார்க்க வேண்டும்... நன்றி...

கருத்துரையிடுக