பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 26 ஜூலை, 2013

ஞாயிறு ஒளி மழையில்

கமல் தனது சொந்தக் குரலில் திரைக்காக பாடிய முதல் தமிழ்ப் பாடல். நன்றாகவே இருக்கின்றது.

திரைப் படம்: அந்தரங்கம்
இசை: P தேவராஜன்
நடிப்பு: கமல், தீபா
இயக்கம்: முக்தா S ஸ்ரீனிவாசன்
குரல்: கமல்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjQ3NjM5Ml8waDN5RV8xZjhk/gnAyiruoli-andharangam.mp3

ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்
நான் அவள் பூ உடலில்
புது அழகினைப் படைக்க வந்தேன்

ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்
நான் அவள் பூ உடலில்
புது அழகினைப் படைக்க வந்தேன்
ஞாயிறு ஒளி மழையில்

உலகெங்கும் பொங்கித் ததும்பும்
அழகெந்தன் ஆணைக்கடங்கும்
அங்கங்கு மெருகு படியும்
அங்கங்கள் ஜாலம் புரியும்
அங்கங்கள் ஜாலம் புரியும்

ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்

மன்மதனும் ரதியும் உன்னால்
பொன் வதனம் பெற்றதென்னாள்
ஊர்வசியும் இங்கு வந்தாள்
பேரழகை வாங்கிச் சென்றாள்
பேரழகை வாங்கிச் சென்றாள்

ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்

தங்கங்கள் இங்கு வருக
தரம் இன்னும் அதிகம் பெறுக
வைரங்கள் நம்பி வருக
புது வடிவம் தாங்கிப் பொலிக
புது வடிவம் தாங்கிப் பொலிக

ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்
நான் அவள் பூ உடலில்
புது அழகினைப் படைக்க வந்தேன்
ஞாயிறு ஒளி மழையில்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசிக்க வைக்கும் பாடல்...

Raashid Ahamed சொன்னது…

கமலஹாசன் ஒரு நடிகர் மட்டுமல்ல பாடகரும் கூட ஆனால் அதிகம் பாடியதில்லை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவு தான். சமீபத்தில் வெளிவந்த விஸ்வரூபத்தில் கூட பாடியிருக்கிறார். இந்த பாடல் ரசிக்கும் படியான பாடல் நல்ல வரிகள்.

கருத்துரையிடுக