பின்பற்றுபவர்கள்

சனி, 13 ஜூலை, 2013

அலையே கடல் அலையே

அபூர்வமான பாடல். அற்புதமான, கவித்துவமான பாடல்வரிகள். பாடல்வரிகளை நசுக்காத மென்மையான இனிய இசை, மனதைக் கொள்ளையிடும் பாடல்.

திரைப் படம்: திருக் கல்யாணம் (1978)
இசை: இளையராஜா
குரல்கள்: S ஜானகி, P ஜெயச்சந்திரன்
பாடல்: கங்கை அமரன்
நடிப்பு: விஜய குமார், ஸ்ரீவித்யா

  http://asoktamil.opendrive.com/files/Nl8xNTY3ODEyOF9wdnY0N18wYzRl/alaye%20kadal%20alaye%20ennanvo.mp3
அலையே கடல் அலையே
ஏன் ஆடுகிறாய்

என்ன தேடுகிறாய்
இன்ப நினைவினில் பாடுகிறாய்
என்னென்னவோ 

உன் ஆசைகள்

பொன்மணல் மேடை மீதினிலே
வெண்பனி வாடை காற்றினிலே
மயக்கும் மாலை பொழுதினிலே
காதலி இந்த நாயகி
பல நாள் வரை காத்திருக்க
என்னென்னவோ உன் ஆசைகள்

அலையே கடல் அலையே
நீ உருகாதே 

மனம் கலங்காதே
உன் அருகினில் நான் இருப்பேன்
என்னென்னவோ உன் ஆசைகள்

வசந்தத்தைத் தேடும் இளந்தளிரே
வாடையில் வாடும் பனி மலரே
நெஞ்சினில் என்றும் உன் நினைவே
கண்மணி உயிர் காதலி
என் கைகளில் தவழ்ந்திருக்க
என்னென்னவோ 

என் ஆசைகள்

கோவிலைத் தேடி தவமிருக்க
தேவியின் நாயகன் துணையிருக்க
ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க
ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க
தெய்வமே இளம் தென்றலே
எங்கள் காதலை வாழ வைப்பாய்
என்னென்னவோ 

நம் ஆசைகள்

அலையே கடல் அலையே
நீ உருகாதே மனம் கலங்காதே
உன் அருகினில் நான் இருப்பேன்
என்னென்னவோ நம் ஆசைகள்
என்னென்னவோ நம் ஆசைகள்

2 கருத்துகள்:

Raashid Ahamed சொன்னது…

இந்த அற்புத பாடல் தங்கள் தொகுப்பில் மிக தாமதமாக இடம் பிடித்திருக்கிறது. முன்னமேயே வந்திருக்க வேண்டிய பாடல்.

Rohan சொன்னது…

அருமையான் சாங்..thanx for the upload..

கருத்துரையிடுக