பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 30 ஜூலை, 2013

வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்


கவிஞர் திரு. பூவை செங்குட்டுவன் அவர்கள் மிகக் குறைந்த பாடல்களே தமிழ் திரைப் படங்களுக்கு எழுதியிருக்கிறார். கந்தன் கருணையில் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், அகத்தியரில் தாயிற் சிறந்த கோவிலுமில்லை, ராஜ ராஜ சோழனில் ஏடு தந்தானடி தில்லையிலே போன்ற பல அற்புதமான பாடல்களை எழுதியவர். 'தேரழந்தூர் சகோதரிகள் ' என்ற அறிமுகத்தோடு ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்டு பின்னாளில் சூலமங்கலம் சகோதரிகளாக புகழ் பெற்றவர்களுக்காக பல பாடல்களை இயற்றியவர்
தனிப் பாடல்கள் பலவற்றை அவர்களுக்காக எழுதியவர். அவைகளுள் இந்தப் பாடலும் ஒரு தலை சிறந்த பாடல். 
திரைப் படம்: கற்பூரம் 1967பாடல்: கவிஞர் திரு. பூவை செங்குட்டுவன்
இசை: D B ராமச்சந்திரன்
பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்
இயக்கம்: சி. என். சண்முகம்
நடிப்பு: . வி. எம். ராஜன், புஷ்பலதா

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjI5NTgxMl9iMUNzR18wY2Fk/vanangidumkaigilil.mp3


வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால் 
வேல் போல் இருக்குதடி

வேல் போல் இருக்குதடி
வேல் கொண்டு நின்றவன் திருமுகம் பார்த்தால்
பால் போல் தெரியுதடி

பால் போல் தெரியுதடி
வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால்
வேல் போல் இருக்குதடி
வேல் போல் இருக்குதடி

கூவிடும் சேவல் கொடிமேலிருந்து
விழித்திடச் சொல்லுதடி
விழித்ததும் என்னை நினைத்திரு என்று  அவன் 
சொல்வது தெரியுதடி
சொல்வது தெரியுதடி

கந்தனின் கருணை மழைவரும் என்றே
மாமயில் ஆடுதடி
கந்தனின் கருணை மழைவரும் என்றே
மாமயில் ஆடுதடி
மாமயில் விரித்த தோகையின் கண்கள்
வேலனைத் தேடுதடி
வேலனைத் தேடுதடி

முதன்முதல் இறைவன் திருவாய் திறந்தான்
முத்தமிழ் பிறந்ததடி
முதன்முதல் இறைவன் திருவாய் திறந்தான்
முத்தமிழ் பிறந்ததடி
அந்த முத்தமிழ் இன்பம் அனைத்திலும் முருகன்
திருமுகம் தோன்றுதடி
திருமுகம் தோன்றுதடி

எப்போது பார்த்தாலும் சிரித்திருக்கும்
அது ஆறு முகங்களடி
எப்போது பார்த்தாலும்சிரித்திருக்கும்
அது ஆறு முகங்களடிஎப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும்
எப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும்
அது பன்னிரு கைகளடி
அது பன்னிரு கைகளடி

4 கருத்துகள்:

NAGARAJAN சொன்னது…

மிகவும் அருமையான எளிமையான பாடல். அனைத்தும் முருகனே என்பதை அழகாக விளக்கும் பாடல்.

myspb சொன்னது…

எனக்கு பிடித்த முருக கடவுள் இனிய பாடல் குரலில் தனி இனிமை தெரியும். நன்றி.

காவிரிமைந்தன் சொன்னது…

அருமையான பாடல்.. அழகான பதிவு.. வாழ்த்துக்கள்.

காவிரிமைந்தன் - kaviri2012@gmail.com website : thamizhnadhi.com

காவிரிமைந்தன் சொன்னது…

உங்களுடன் தொடர்பில் இருக்க விரும்புகிறேன். எனது அலைபேசி எண் 00971502519693 ... தங்கள் அலைபேசி மற்றும் மின் அஞ்சல் முகவரிகள் தருக.
காவிரிமைந்தன்

கருத்துரையிடுக