பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 5 ஜூலை, 2013

நெஞ்சே நீ போ சேதியைச் சொல்ல நானும் வருவேன் மீதியைச் சொல்ல

தமிழ் திரைப் பட வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற படங்களில் இதுவும் ஒன்று. ஹாலிவூட் காமேடி படங்களுக்கு  இணையானது என சொல்லலாம். இன்றைய  இளைஞர்கள் பார்த்தால் நிச்சயம் ரசிப்பார்கள்.

இந்தப் பாடல் வழக்கம் போல சுசீலா அம்மாவுக்கு மிக ஈஸியானப் பாடல். ஆனால் நமக்கு தேனாக இனிக்கும்.

அவர் நெஞ்சே.... என ஆரம்பிக்கும் போதே நம்மை எங்கோ  கொண்டு போய்விடுகிறார்.

திரைப் படம்: தேன் மழை (1966)
இயக்கம்: முக்தா ஸ்ரீனிவாசன்
நடிப்பு: ஜெமினி,  K R விஜயா
இசை: T K ராமமூர்த்தி
குரல்: சுசீலா
பாடல்: வாலி

http://asoktamil.opendrive.com/files/Nl8xNTMzNTAyNV92WnExY185MTQ4/nenje%20nee%20po.mp3






ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹோ ஹோ ஹோ ஹோ

நெஞ்சே நீ போ சேதியைச் சொல்ல

நானும் வருவேன் மீதியைச் சொல்ல

நெஞ்சே நீ போ சேதியைச் சொல்ல

நானும் வருவேன் மீதியைச் சொல்ல

வாழ்வே நீ வா வாசலில் மெல்ல

கால்களும் இங்கே கண் வழி செல்ல

நெஞ்சே நீ போ சேதியைச் சொல்ல

நானும் வருவேன் மீதியைச் சொல்ல

மாலை வராமல் இரவு வராதோ

மாலையிடாமல் உறவு வராதோ

தூது விடாமல் ஆசை விடாதோ

துணைவன் இல்லாமல் தூக்கம் வராதோ

ஆயிரம் கேள்வி உன்னிடம் கேட்பேன்

விடை கிடைக்காமல் உறங்கிட மாட்டேன்

பூவிழி சிவக்க செவ்விதழ் வெளுக்க

நூலிடை இளைக்க நாடகம் நடக்க

நெஞ்சே நீ போ சேதியைச் சொல்ல

நானும் வருவேன் மீதியைச் சொல்ல

மாளிகை வெளியில் ஜானகி நின்றாள்

மாமணி மன்னன் ராமனைக் கண்டாள்

பார்வைகள் வழியே வார்த்தைகள் ஆட

பாவலன் கம்பன் பாட்டினில் பாட

நான் அது போலே காதலில் விழுந்தேன்

நாயகன் பெயரால் காவியம் வரைந்தேன்

நால்விழி ஒன்றாய் பொருந்திடும் தேதி

நான் ஒரு பாதி அவன் ஒரு பாதி

நெஞ்சே நீ போ சேதியைச் சொல்ல

நானும் வருவேன் மீதியைச் சொல்ல

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

என்னவொரு இனிமையான பாடல்... நன்றி சார்...

Raashid Ahamed சொன்னது…

இது ஒரு இனிய பாடல் மட்டுமல்ல அரிய பாடல் !! உங்களை போன்ற இசையார்வம் மிகுந்த சிலருக்கு தான் இது போன்ற பாடல்கள் தட்டுப்படுகின்றன.

கருத்துரையிடுக