பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 9 ஜூலை, 2013

தேவன் கோயில் மணி தினமும் வாழ்த்தும் இனி

திருமணம் நிச்சயமான காதலர்களின் இறை நன்றி. சுகமான பாடல். இனிமை குரல்களில். ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான பாடல். ஷ்யாமின் இசையில் மற்றுமொரு அழகானப் பாடல்.

திரைப் படம்: குழந்தை யேஸு (1984)
இசை: ஷ்யாம்
குரல்கள்: , வாணி ஜெயராம்
பாடல்: வைரமுத்து
இயக்கம்: ராஜன்
நடிப்பு:, சரிதா, ராஜேஷ், விஜயகாந்த்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNTQ0NjM4OF92eFg2dF84NjM1/devan%20koil%20mani[128].mp3

தேவன் கோயில் மணி தினமும் வாழ்த்தும் இனி
தேவன் கோயில் மணி தினமும் வாழ்த்தும் இனி
குழந்தை யேஸூவே நன்றி போற்றினேன்
உந்தன் பாதத்தில் விளக்கேற்றினேன்.
ஊமை வீணை அரங்கேறும் நேரம்
இளமை சுகம் பெறும்

தேவன் கோயில் மணி தினமும் வாழ்த்தும் இனி
இதழிலிருந்து இறங்கும் விருந்து
இளங்கொடி தருவாயோ
இளமை தாங்குமோ
ல ல ல ல லலலலலா
இதழிலிருந்து இறங்கும் விருந்து
இளங்கொடி தருவாயோ
இளமை தாங்குமோ

இளமையின் கனவுகள் முடியாது
தலைவா நீயின்றி தீராது
இளமையின் கனவுகள் முடியாது
தலைவா நீயின்றி தீராது

இவள் கண்ணில் இன்று இரு சந்த்ரோதயம்
இந்த தேவன் மகள் ஒரு தேவாலயம்

அரும்புகள் விரிகின்ற ஆசை நேரம்

தேவன் கோயில் மணி தினமும் வாழ்த்தும் இனி
லலலா லாலாலலலல
லலலலலலாலலா

திரிகள் இருந்தும் இருளில் அணைந்து தனிமையில் கிடந்தேனே
குழந்தை யேஸுவே
ல ல ல ல ல ல

திரிகள் இருந்தும் இருளில் அணைந்து தனிமையில் கிடந்தேனே
குழந்தை யேஸுவே

அருள் தரும் இரு கரம் சுடரேற்ற
எரிந்தேன் நீ வந்து நெய்யூற்ற
அருள் தரும் இரு கரம் சுடரேற்ற
எரிந்தேன் நீ வந்து நெய்யூற்ற

எந்தன் மார்பில் விழும் ஒரு ரோஜா மலை
இது கண்ணீர் இல்லை ஒரு காதல் மழை
இரு நதி ஒரு நதி ஆகும் வேளை

தேவன் கோயில் மணி தினமும் வாழ்த்தும் இனி
குழந்தை யேஸூவே நன்றி போற்றினேன்
உந்தன் பாதத்தில் விளக்கேற்றினேன்.
ஊமை வீணை அரங்கேறும் நேரம்
இளமை சுகம் பெறும்

தேவன் கோயில் மணி தினமும் வாழ்த்தும் இனி
தேவன் கோயில் மணி தினமும் வாழ்த்தும் இனி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக