பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 19 ஜூலை, 2013

தொடங்கும் தொடரும் புது உறவு


நேற்று மறைந்த திரு வாலி அவர்கள் நினைவாகவும்  இனிமையாய் பாடலை அனுபவித்து பாடி வழங்கி இருக்கும் பாடகர்களுக்காகவும் இந்தப் பாடல்.
உண்மையில் இந்தப் பாடல் M S விஸ்வனாதன் இசையில் வந்ததாக நான் நினைத்திருந்தேன். ஆனால் தெலுங்கு பட உலக இசையமைப்பாளர் சத்யம் என்று தெரிந்த போது நம்பமுடியவில்லை. அருமையான படைப்பு.


திரைப் படம்: முடிசூடா மன்னன் (1978)
பாடியவர்கள்: S P B, P சுசீலா
இசை: சத்யம்  (நான் நினைத்தது போல் M S விஸ்வனாதன் இல்லை)
இயக்கம்: R விட்டல்
நடிப்பு: ஜெய்ஷங்கர், ஸ்ரீதேவி, தீபா
பாடலாசிரியர்: மறைந்த திரு வாலி அவர்கள்
கதை: தூயவன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNTkzMDA5Nl9PMEo3Yl81YjZh/ThodangumThodarum.mp3


தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு
மடி மீது நீ வரும் போது
சொல்லும் மோகன ராகங்கள் நூறு
தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு

மாளிகை மாடம் மணிமுடி க்ரீடம்
என்னிடம் கிடையாது கண்ணே
மன்னவன் மகளே மல்லிகை மலரே
உன்னிடம் உறவாட வந்தேன்

ஆ ஆ ஆ ஆ
ஆயினும் என்ன அழகிய மேனி
உன் வசம் வரும் அல்லவா

தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு
மடி மீது நீ வரும் போது
சொல்லும் மோகன ராகங்கள் நூறு
தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு

அரண்மனை தோட்டம் காவியர் கூட்டம்
ஆயிரம் அலங்காரம் இருக்க
அதை விட இன்பம் அணைத்திடும் நீதான்
அங்கங்கள் எங்கெங்கும் இனிக்க

மாதுளங்கனியே மரகத சிலையே
மந்திரம் நான் சொல்லவா

தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு

பொன் எழில் கொஞ்சும் புன்னகை ராணி
என்னுடன் வர வேண்டும் பவனி
பூந்தளிர் மாது புரவியின் மீது
வருகையில் மயங்காதோ அவனி

ஒஹ் ஒஹ்
ஓவியம் இரண்டு ஊர்வலம் செல்லும்
காவியம் இது அல்லவோ

தொடங்கும்
ஆஹ்

தொடரும்
ஆஹ்

புது
உறவு
ஆஹ்

மயங்கும்
ஆஹ்

மலரும்
ஆஹ்

பல
இரவு
ஆஹ்

மடி மீது நீ வரும் போது
சொல்லும் மோகன ராகங்கள் நூறு

தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாலி என்றும் நம் மனதில் வாழி தான்...

நன்றி...

Gopi சொன்னது…

காவியர் கூட்டம் அல்ல.... தாதியர் கூட்டம்... மாற்றி அமைக்க.

கருத்துரையிடுக