பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 7 ஜூலை, 2013

ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே

அழகான கவிதையில் அருமையானப் பாடல்.

திரைப் படம்: பனித்திரை (1961)
இயக்கம்: முக்தா V ஸ்ரீநிவாசன்
நடிப்பு: ஜெமினி, சரோஜா தேவி
குரல்கள்: P B ஸ்ரீனிவாஸ், P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இசை: K V மகாதேவன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNTM5NTg4M18zbDY1Yl8xNWEx/ore%20kelvi.mp3


ஒரே கேள்வி

ம் ம் ம்

ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே

ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே

ஒரே பதில்

ஹா ஹா

ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே

ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே

ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே

ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே

மழலைப் போலத் தமிழில் பேசி மயங்க வைத்தாயே

நான் மயங்கும் போது குறும்பு பேசி சிரிக்க வைத்தாயே

மழலைப் போலத் தமிழில் பேசி மயங்க வைத்தாயே

நான் மயங்கும் போது குறும்பு பேசி சிரிக்க வைத்தாயே

சிரிக்கும் போது சிரிப்பதுதான் ஆசை அல்லவா

கைகள் அணைக்கும் போது அணைப்பதுதான் காதல் அல்லவா

சிரிக்கும் போது சிரிப்பதுதான் ஆசை அல்லவா

கைகள் அணைக்கும் போது அணைப்பதுதான் காதல் அல்லவா

கண்ணைப் பறித்துக் கொள்ளவா

ஏன் எடுத்துச் செல்லவா

கண்ணைப் பறித்துக் கொள்ளவா

ஏன் எடுத்துச் செல்லவா

ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே

ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே

குழி விழுந்த கண்ணத்தை என் இதழில் மூடவா

உன்னைக் குழந்தையாக்கி மடியில் வைத்துப் பாட்டு பாடவா

குழி விழுந்த கண்ணத்தை என் இதழில் மூடவா

உன்னைக் குழந்தையாக்கி மடியில் வைத்துப் பாட்டு பாடவா

மார்பினிலும் தோளினிலும் துள்ளி ஆடவா

அந்த மயக்கத்திலே சிறிது நேரம் கண்ணை மூடவா

மார்பினிலும் தோளினிலும் துள்ளி ஆடவா

அந்த மயக்கத்திலே சிறிது நேரம் கண்ணை மூடவா

கையில் அள்ளி அணைக்கவா

கதை சொல்லி முடிக்கவா

நான் சேர்த்து அணைக்கவா

முகம் பார்த்து சிரிக்கவா

கையில் அள்ளி அணைக்கவா

கதை சொல்லி முடிக்கவா

நான் சேர்த்து அணைக்கவா

முகம் பார்த்து சிரிக்கவா

ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே

ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே

ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே

ஒரே பதில் ஒரே பதி எந்தன் நெஞ்சிலே

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

P B ஸ்ரீனிவாஸ் அவர்களின் இனிமையான குரலில் அருமையான பாடல்... நன்றி சார்..

கருத்துரையிடுக